Warning: Trying to access array offset on false in /home/automobiletamilancom/public_html/wp-content/plugins/jnews-amp/include/class/class-init.php on line 427

Warning: Trying to access array offset on false in /home/automobiletamilancom/public_html/wp-content/plugins/jnews-amp/include/class/class-init.php on line 428
சர்வதேச அளவில் நிசான் மேக்னைட் கான்செப்ட் அறிமுகம் | Nissan magnite concept suv

சர்வதேச அளவில் நிசான் மேக்னைட் கான்செப்ட் அறிமுகம்

23a76 nissan magnite

இந்தியாவில் ஜனவரி 2021-ல் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகின்ற நிசான் மேக்னைட் கான்செப்ட் எஸ்யூவி மாடல் 4 மீட்டருக்கு குறைவான நீளத்தைப் பெற்று ரூ.5.25 லட்சம் விலையில் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகின்றது.

நம் நாட்டில் விற்பனையில் உள்ள ஹூண்டாய் வென்யூ, விட்டாரா பிரெஸ்ஸா, எக்ஸ்யூவி 300, நெக்ஸான், ஈக்கோஸ்போர்ட் மற்றும் ஆகஸ்ட் 7 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட உள்ள கியா சோனெட் எஸ்யூவி போன்றவற்றை எதிர்கொள்ளும் திறனுடன் விளங்க உள்ள மேக்னைட் மாடலின் கான்செப்ட் நிலை தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ள நிலையில் உற்பத்தி நிலை மாடல் ஏறக்குறைய இதே வடிவ தாத்பரியத்தை அடிப்படையாக கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மேக்னைட் டிசைன்

ரெனோ-நிசான் கூட்டணியின் CMF-A பிளாட்ஃபாரத்தில் வடிவமைக்கப்பட்டு 4 மீட்டருக்கு குறைவான நீளத்தை கொண்டிருக்க உள்ள மேக்னைட்டில் முகப்பு தோற்ற அமைப்பில் எல்இடி ஹெட்லேம்ப், எல்இடி ரன்னிங் விளக்குகளை பெற்று டட்சன் பிராண்டுகளில் உள்ளதை போன்ற எண்கோண கிரில் வடிவமைப்பைக் கொண்டுள்ளது. முன்பாக இந்த கார் டட்சன் பிராண்டில் எதிர்பார்க்கப்பட்டது.

ஸ்டைலிஷான 16 அங்குல அலாய் வீல், நேர்த்தியான வீல் ஆர்சு கொண்டு அதே நேரத்தில் A மற்றும் C பில்லர்களில் சற்று சாய்வாக வழங்கப்பட்டு கிராஸ்ஓவர் மாடல்களை போன்ற தோற்ற பொலிவினை வழங்குகின்றது. பின்புறத்தில் எல்இடி டெயில் விளக்கு, நேர்த்தியான பம்பர் கொண்டுள்ளது.

காரின் இன்டிரியர் தொடர்பாக எந்த படங்களும் வெளிவராத நிலையில், காரில் 8.0 அங்குல தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் கொண்டு கனெக்ட்விட்டி நுட்பங்கள், 360 டிகிரி கேமரா, க்ரூஸ் கண்ட்ரோல், ஆட்டோ கிளைமேட் கண்ட்ரோல், ஸ்டீயரில் மவுன்டேட் ஆடியோ கண்ட்ரோல் உள்ளிட்ட வசதிகளை பெற்ற பிரீமியம் இருக்கைகள் மற்றும் தாராளமான இடவசதியை வழங்கும் என நிசான் உறுதிப்படுத்தியுள்ளது.

மேக்னைட் எஸ்யூவி கார் மாடலில் 95 hp பவரை வழங்கும் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் பொருத்தப்படலாம். இதில் 5 வேக மேனுவல் மற்றும் சிவிடி கியர்பாக்ஸ் இடம்பெற வாய்ப்புள்ளது. இதுதவிர சாதாரன 1.0 லிட்டர் பெட்ரோல் என்ஜின் 72hp பவருடன் வரக்கூடும். இதில் 5 வேக மேனுவல் மற்றும் ஏஎம்டி கியர்பாக்ஸ் இடம்பெறக் கூடும்.

நடப்பு நிதி ஆண்டில் மேக்னைட் எஸ்யூவி காரை விற்பனைக்கு கொண்டு வருவதனை நிசான் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது.

Exit mobile version