Automobile Tamilan

9 லட்சம் விற்பனை இலக்கை கடந்த ரெனால்ட் இந்தியா

2023 renault kiger suv

கடந்த 11 ஆண்டுகளாக இந்தியாவில் செயல்படும் ரெனால்ட் இந்தியா நிறுவனம், 9,00,000 இலக்கை வெறிக்கரமாக கடந்துள்ளது. தற்பொழுது இந்தியாவில் ரெனோ க்விட், கிகர், மற்றும் ட்ரைபர் ஆகிய மாடல்கள் விற்பனைக்கு கிடைத்து வருகின்றது.

ரெனால்ட் இந்தியா நிறுவனம், நாடு முழுவதும் 450க்கும் மேற்பட்ட ஷோரூம்கள் மற்றும் 530 சர்வீஸ் ஸ்டேஷன்களை பெற்றுள்ளது.

Renault India

புதிய ரியல் டிரைவிங் உமிழ்வு (RDE) விதிமுறைகளை பூர்த்தி செய்வதற்காக பிப்ரவரி 2023-ல் க்விட், ட்ரைபர் மற்றும் கிகர் உள்ளிட்ட இந்திய வரிசையை ரெனால்ட் மேம்படுத்தப்பட்டுள்ளது. க்விட், ட்ரைபர் மற்றும் கிகர் ஆகிய 2023 மாடல்கள் எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி புரோகிராம் (ESP), டிராக்ஷன் கண்ட்ரோல் சிஸ்டம் (TCS) மற்றும் டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் (TPMS) ஆகியவை தரமாக வருகின்றன.

க்விட் தேர்ந்தெடுக்கப்பட்ட வகைகளில் ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட்டை (HSA) வழங்குகிறது. கிகர் மற்றும் ட்ரைபர் இரண்டுமே குளோபல் NCAP இலிருந்து 4-ஸ்டார் கிராஷ் டெஸ்ட் மதிப்பீட்டைப் பெற்றுள்ளன.

ரெனால்ட் இந்தியா பிரிவு சிஇஓ மற்றும் நிர்வாக இயக்குநர் வெங்கட்ராம் மாமில்லபல்லே கூறுகையில், “இந்தியாவில் 9 லட்சம் விற்பனை எண்ணிக்கை இலக்கை நாங்கள் வெற்றிகமாக கடந்துள்ளதை என்னி மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். இந்த நம்பமுடியாத பயணம் எங்கள் மதிப்பிற்குரிய வாடிக்கையாளர்களின் அசைக்க முடியாத ஆதரவு மற்றும் பிராண்டின் மீதான நம்பிக்கையால் சாத்தியமானது. , அர்ப்பணிப்புள்ள டீலர் பார்ட்னர்கள், மதிப்புமிக்க சப்ளையர்கள் மற்றும் எங்களின் விதிவிலக்கான பணியாளர்கள் மற்றும் பொறியியல் வல்லுநர்கள் குழு ஆகியவர்களுக்கு சாதனைக்கு பங்களித்த அனைவருக்கும் எங்கள் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

Exit mobile version