இந்தியாவில் ரெனால்ட் நிறுவனம் உள்நாட்டில் தயாரிக்கப்பட உள்ள முதல் எலக்ட்ரிக் காரை ரூ.10 லட்சம் விலைக்குள் க்விட் காரின் அடிப்படையில் விற்பனைக்கு 2024 இறுதி அல்லது 2025 ஆம் ஆண்டின் துவக்க மாதங்களில் வெளியிடப்படலாம்.

2024 ஆம் ஆண்டு ட்ரைபர் , க்விட் மற்றும் கிகர் கார்களின் மேம்படுத்தப்பட்ட மாடல்களை அறிமுகம் ரெனால்ட் திட்டமிட்டிருக்கின்றது.

Renault Kwid EV

விற்பனையில் கிடைக்கின்ற சிறிய ரக ஹேட்ச்பேக் சந்தையில் உள்ள க்விட் காரில் அடிப்படையிலான பல்வேறு டிசைன் மேம்பாடுகளை எலக்ட்ரிக் வாகனங்களுக்கு உரித்தான வகையில் பெற்றிருக்க உள்ள க்விட் எலக்ட்ரிக் காரை CMF-A EV பிளாட்ஃபாரத்தில் வடிவமைக்கப்பட உள்ளது.

ரெனால்ட்-நிசான் கூட்டணியில் தயாரிக்கப்பட உள்ள புதிய மின்சார காரில் அனேகமாக 60 % வரை உதிரிபாகங்கள் உள்நாட்டில் பெறப்படும் என்பதனால் மிகவும் சவாலான விலையில் அமைந்திருக்கலாம்.

ஐரோப்பாவில் விற்பனை செய்யப்படுகின்ற க்விட் EV காரில் 44hp பவர் மற்றும் 125Nm டார்க் வெளிப்படுத்துவதுடன் 26.8kWh பேட்டரி பேக்குடன் உள்ளது. இதன் அடிப்படையில் இந்திய சந்தையிலும் பேட்டரி பேக் பெறலாம் அல்லது கூடுதல் திறனுடன் வரக்கூடும். 295km (WLTP சுழற்சி) ரேஞ்ச் அல்லது 350 கிமீ வரை வெளிப்படுத்தலாம்.

ரெனால்ட் மட்டுமல்லாமல் இதே மாடலின் அடிப்படையில் எலக்ட்ரிக் காரை நிசான் நிறுவனமும் விற்பனைக்கு கொண்டு வரவுள்ளது. 2025 ஆம் ஆண்டில் ரெனால்ட் டஸ்ட்டர் மற்றும் 7 இருக்கை கொண்ட ஜாக்கர் விற்பனைக்கு வெளியாக உள்ளது.

renault and nissan ev plans