கலர்கலராய் ரெனோ க்விட் லைவ் ஃபார் மோர் அறிமுகம்

பிரபலமான ரெனால்ட் க்விட் காரில் முன்பு சில குறிபட்ட வசதிகள் மட்டுமே வழங்கப்பட்ட லைவ் ஃபார் மோர் எடிசன் தற்போது 7 வகையான பாடி கிராபிக்ஸ் வழங்கப்பட்டு அனைத்து வேரியன்டிலும் கிடைக்கின்றது.

 க்விட் லைவ் ஃபார் மோர்

ஸ்போர்ட்ஸ், ரேஸ், ரலிஸ்கோஸ், சேஸ், ஸிப், டர்போ மற்றும் கிளாசிக் என மொத்தம் 7 விதமான பாடி கிராபிக்ஸ பெற்றதாக வந்துள்ள லைவ் ஃபார் மோர் எடிசன் அனைத்து நிறங்களிலும் அனைத்து எஞ்சின் வகைகளிலும் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. க்விட் காரில் 0.8 லிட்டர் மற்றும் 1.0 லிட்டர் , ஏஎம்டி போன்ற எஞ்சின் வகைகள் உள்ளன.

க்விட் எஞ்சின் விபரம்

54பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 799சிசி என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதில் 5 வேக மெனுவல் கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டடுள்ளது. ரெனோ க்விட் கார் மைலேஜ் லிட்டருக்கு 25.17கிமீ ஆகும்.

67.06 bhp ஆற்றல் மற்றும் 91 Nm டார்க் வெளிப்படுத்தும் 1.0 லிட்டர் SCe பெட்ரோல் என்ஜின் இடம்பெற்றுள்ளது. இதில் 5 வேக மெனுவல் கியர்பாக்ஸ் பெற்றுள்ளது. ரெனோ க்விட் 1.0லி மைலேஜ் லிட்டருக்கு 23.07 கிலோமீட்டர் ஆகும்.

க்விட் ஏஎம்டி

67.06 bhp ஆற்றல் மற்றும் 91 Nm டார்க் வெளிப்படுத்தும் 1.0 லிட்டர் SCe ( Smart Control efficiency- SCe) பெட்ரோல் என்ஜின் இடம்பெற்றுள்ளது. இதில் இடம்பெற்றுள்ள 5 வேக ஆட்டோமேட்டிக் மேனுவல் கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது.

Exit mobile version