ஸ்கோடா இந்தியா நிறுவனம் கடந்த 2 ஆண்டுகளில் சுமார் 1 லட்சத்துக்கும் கூடுதலான வாகனங்ளை விற்பனை செய்து புதிய சாதனையை படைத்துள்ளது. இந்நிறுவனம் இந்தியாவில் ஸ்லாவியா, கோடியாக் மற்றும் குஷாக் என மூன்று மாடல்களை விற்பனை செய்து வருகின்றது.
கடந்த ஜனவரி 1, 2022 முதல் டிசம்பர் 31,2022 வரையில் 53,721 கார்களும், கடந்த 2023 ஆம் ஆண்டில் 48,755 கார்களையும் விற்பனை செய்துள்ளது. குறிப்பாக கடந்த 2022 ஆம் ஆண்டை விட விற்பனை எண்ணிக்கை குறைவாக அமைந்திருக்க காரணம் உதிரிபாகங்கள் பெறுவதில் சிரமத்தை எதிர்கொண்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. 2023 ஆம் ஆண்டில், கோடியாக் 2022 வருடத்தை விட 100% வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.
Skoda Auto India
இந்தியாவில் ஸ்கோடா நிறுவனம் சீரான வளர்ச்சி அடைந்து வரும் நிலையில் வரும் நாட்களில் தனது முதல் எலக்ட்ரிக் கார் உட்பட ஆக்டேவியா மற்றும் ஸ்பெஷல் எடிசன் மாடல்களை விற்பனைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளது.
கடந்த மாதம் அறிவிக்கப்பட்டதை போலவே ஸ்கோடா ஆட்டோ தனது குஷாக் எஸ்யூவி விலையை ரூ.16,000 முதல் ரூ.1,00,000 வரை உயர்த்தியுள்ளது. அடுத்து ஸ்லாவியா செடானின் விலையை ரூ.11,000 முதல் ரூ.64,000 வரை அதிகரித்துள்ளது.
2021 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் 120 வாடிக்கையாளர் சேவை மையங்கள் இருந்து, ஸ்கோடா ஆட்டோ இந்தியா 2023 ஆம் ஆண்டின் இறுதியில் 260 ஆக தனது சேவை மையத்தை உயர்த்தியுள்ளது.
ஸ்கோடா ஆட்டோவிற்கு இந்தியா தொடர்ந்து முக்கிய சந்தையாகவும், ஐரோப்பாவிற்கு வெளியே உள்ள மிகப்பெரிய சந்தைகளில் ஒன்றாகவும் விளங்குகின்றது.