• கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result

300 கிமீ பயணிக்கும் திறனுடன் டாடா அல்ட்ராஸ் EV அறிமுகம் எப்போது?

by MR.Durai
22 January 2020, 7:35 am
in Car News
0
ShareTweetSend

Tata Altroz electric

டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் 5 நட்சத்திர மதிப்பீட்டை பெற்ற அடுத்த மாடலான அல்ட்ராஸ் காரின் ஐசி என்ஜின் விற்பனைக்கு வெளியாக உள்ள நிலையில், அடுத்து எலக்ட்ரிக் வெர்ஷன் மாடலாக இந்த கார் 2021 ஆம் ஆண்டின் துவக்க மாதங்களில் விற்பனைக்கு வெளியாக உள்ளது.

டாடாவின் ஜிப்ட்ரான் நுட்பத்தை பெற்ற முதல் எலக்ட்ரிக் மாடலான நெக்ஸான் இ.வி ஜனவரி 28, 2020-ல் இந்தியாவில் வெளியிடப்பட உள்ள நிலையில் அதனை தொடர்ந்த அடுத்த 12 மாதங்களுக்குள் அல்ட்ராஸ் இ.வி காரும் வெளியாக உள்ளது. ஜிப்ட்ரான் விபரத்தின் படி குறைந்தபட்ச ரேஞ்ச் 250 கிமீ – 300 கிமீ என தொடங்குவதுடன் மிக வேகமாக சார்ஜிங் செய்வதற்கான விரைவு சார்ஜிங் வசதி ஆப்ஷன் உட்பட லித்தியம் ஐயன் செல் கொண்ட பேட்டரியை பாதுகாக்க லிக்யூடு கூல்டு வசதியுடன், ஐடியல் வெப்பத்தை பராமரிக்கும் நோக்கில் வழங்கப்படும்.  உயர் ரக ஸ்டீல் பேக்கில் பொருத்தப்பட்டிருக்கும் இந்த பேட்டரிக்கு IP67 சான்றிதழ் பெற்றிருக்கும். எனவே, தூசு மற்றும் நீரினால் எந்த பாதிப்பும் ஏற்படாது. டாடாவின் எலக்ட்ரிக் வாகனங்களின் பேட்டரி மற்றும் மோட்டாருக்கு 8 ஆண்டு வாரண்டி அல்லது 1.60 லட்சம் கிமீ வழங்கப்பட உள்ளது.

டாடாவின் மின்சார கார்கள் அனைத்தும் கனெக்டிவ் டெக்னாலாஜியை அடிப்படையாகவே பெற்றிருக்கும் என்பதனால், பல்வேறு நவீன டெக் வசதிகள், வாகனத்தின் நிலை, இருப்பிடம் உள்ளிட்டவற்றை இலகுவாக அறிய இயலும் வகையில் வசதிகள் கொண்டிருக்கும்.

டாடா அல்ட்ராஸ் மின்சார கார் விற்பனைக்கு வரும்போது காரின் விலை ரூ. 11 லட்சத்தில் தொடங்குவதற்கான வாய்ப்புகள் உள்ளது. ஜனவரி 22 ஆம் பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின் பெற்ற டாடா அல்ட்ராஸ் விற்பனைக்கு வெளியிடப்பட உள்ள நிலையில், சமீபத்தில் குளோபல் என்சிஏபி கிராஷ் டெஸ்ட் சோதனையில் 5 நட்சத்திர மதிப்பீட்டை பெற்ற பாதுகாப்பான இந்திய கார் என்ற பெருமையை பெற்றுள்ளது.

Tags: Tata Altroz
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

526 கி.மீ ரேஞ்சுடன் கியா சிரோஸ் EV காரின் முன்பதிவு தொடங்கியது

ஜூலை 24ல் 2026 பிரெஸ்ஸாவை வெளியிடும் மாருதி சுசூகி

அப்கிரேட் ஸ்டைலுக்கு புதிய மாருதி சுசூகி ஈகோ ஸ்டார் எடிஷன் அறிமுகம்.!

2027-க்குள் ஹூண்டாயின் இரண்டு புதிய அதிரடி எஸ்யூவிகள்.!

10 லட்சத்திற்கும் குறைவான விலையில் சன்ரூஃப் உள்ள டாடா நெக்ஸான் அறிமுகம்

மீண்டும் வந்த மஹிந்திரா BE 6 பேட்மேன் எடிஷன் மார்ச் 10-ல் புக்கிங் தொடக்கம்!

ரெனால்ட்டின் ‘மினி டஸ்ட்டர்’ 2027ல் விற்பனைக்கு வருகின்றது.!

மார்ச் 17ல், புதிய டஸ்ட்டர் விலையை அறிவிக்க தயாராகும் ரெனால்ட் இந்தியா.!

2026 டாடா பஞ்ச் புதிய அம்சங்களுடன் ரூ. 5.59 லட்சத்தில் வெளியானது

ரூ. 13.66 லட்சம் முதல் ஆரம்பம் மஹிந்திரா XUV 7XO அறிமுகமானது

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan

Exit mobile version