டாடா மோட்டார்சின் முதல் QWD எனப்படுகின்ற ஆல் வீல் டிரைவ் சிஸ்டத்தை பெற்ற ஹாரியர்.EV எஸ்யூவி மாடலை கேரளாவில் அமைந்துள்ள தென்னிந்தியாவின் உயரமான ஆனைமுடி மலை மீது ஏறி தனது ஆஃப் ரோடு திறனை நிரூபித்துள்ளது.
மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள ஆனைமுடி மலையின் உயரம் சுமார் 2, 695 மீ (8, 842 அடி) ஆக உள்ள நிலையில், இதன் மீது 34 டிகிரி கோணத்தில் செங்குத்தாக ஹாரியர் மின்சார காரை ஏற்றி டாடா புதிய சாதனையை படைத்துள்ளது.
500Nm வரை டார்க் வெளிப்படுத்தக்கூடிய QWD (Quad Wheel Drive) இரட்டை மோட்டார் பெற்ற ஹாரியர்.இவி மாடலின் பேட்டரி மற்றும் நுட்பவிபரங்கள் என அனைத்தும் ஜூலை 3 ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில் டாடா தனது சமூக ஊடகத்தில் வெளியிட்ட வீடியோ மூலம் சில முக்கிய தகவல்களும் கிடைத்துள்ளது.
90% சார்ஜிங் உள்ள சமயத்தில் 565 கிமீ பயணிக்கலாம் என கிளஸ்ட்டரில் காட்டுகின்ற நிலையில், அனேகமாக உண்மையான ரேஞ்ச் நிகழ்நேரத்தில் 500+ கிமீ வெளிப்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்த காரில் Rock Crawl mode உட்பட road, snow, sand மற்றும் கஸ்டமைஸ் மோடு இடம்பெறலாம் என எதிர்பார்க்கப்படுகின்ற நிலையில் 360 டிகிரி கேமரா மூலம் காரை சுற்றி அறிந்து கொள்ள transparent mode இடம்பெற்றிருக்கின்றது.
12.3 அங்குல இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தில் பல்வேறு கனெக்ட்டிவிட்டி சார்ந்த அம்சங்களை வழங்குவதுடன் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் பிளே உடன் கூடுதலாக சன்ரூஃப், ஆம்பியன் லைட்டிங் என பலவற்றை கொண்டிருக்கும்.
3 புள்ளி சீட் பெல்ட், 7 ஏர்பேக்குகள் உட்பட லெவல் 2 ADAS , 360 டிகிரி கேமரா, எலக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கண்ட்ரோல் என பலவற்றை கொண்டிருக்கும் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
ஆட்டோமொபைல் தமிழன் பார்வையில்..,
வடிவமைப்பில் வழக்கமான ICE ஹாரியரை போல அமைந்திருந்தாலும், ஆஃப் ரோடு சாகசங்கள், அதிகப்படியான ரேஞ்ச் பாதுகாப்பு போன்றவை ஹாரியர்.இவி அமோக வரவேற்பினை பெறலாம், ஆனால் விலை சவாலாக அமையும் பட்சத்தில் டாடாவின் மின்சார வாகன சந்தையில் முதலிடத்தை தக்கவைத்துக் கொள்ளலாம்.
View this post on Instagram