டாடா மோட்டார்சின் QWD எனப்படுகின்ற ஆல் வீல் டிரைவ் பெற்ற எலக்ட்ரிக் எஸ்யூவி ஹாரியர்.EV உற்பத்தி துவங்கப்பட்டுள்ள நிலையில் முதல் நாள் முன்பதிவில் 10,000 எண்ணிக்கையை கடந்துள்ளதாக தனது X சமூக ஊடகத்தில் குறிப்பிட்டுள்ளது.
ரூ.21.49 லட்சம் முதல் ரூ.30.23 லட்சம் எக்ஸ்-ஷோரூம் விலையில் வெளியிடப்பட்டுள்ள ஹாரியர்.இவி காரில் 65Kwh மற்றும் 75Kwh என இரு பேட்டரி ஆப்ஷனை பெற்று முறையே டாடாவின் C75 ரேஞ்ச் 420-455கிமீ முதல் 480-505 கிமீ வெளிப்படுத்தும் என உறுதிப்படுத்தியுள்ளது.
சமீபத்தில் இந்த மாடல் பாரத் NCAP மூலம் சோதனை செய்யபட்ட கிராஷ் டெஸ்ட்டில் குழந்தைகள் மற்றும் வயது வந்தோர் பாதுகாப்பில் 5 நட்சத்திரத்தை பெற்றிருந்தது.
AWD 75kWh வகைகள் MIDC-சான்றளிக்கப்பட்ட 627km மற்றும் 622km வரை சிங்கிள் சார்ஜில் பயணிக்க முடியும்.டாடாவின் உண்மையான ரேஞ்ச் சோதனை மூலம் RWD 75kWh ஆனது 480-505km வழங்கலாம்.
உற்பத்தி துவங்கப்பட்டுள்ளதால் ஹாரியர்.இவி டெலிவரி நடப்பு ஜூலை மாதம் மத்தியிலே பதிவு செய்த வாடிக்கையாளர்களுக்கு கிடைக்க உள்ளது.