Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
Automobile Tamilan

ரூ. 12.18 லட்சத்தில் டாடா ஹெக்ஸா டவுன்டவுன் அர்பன் எடிசன் விற்பனைக்கு வந்தது

by MR.Durai
4 November 2017, 6:57 am
in Car News
0
ShareTweetSend

டாடா மோட்டார்சின் இம்பேக்ட் டிசைன் அடிப்படையில் உருவான டாடா ஹெக்ஸா காரின் அடிப்படையிலான கூடுதல் வசதிகளை பெற்ற டாடா ஹெக்ஸா டவுன்டவுன் அர்பன் எடிசன் கார் ரூ.12.18 லட்சம் ஆரம்ப விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

டாடா ஹெக்ஸா டவுன்டவுன் அர்பன் எடிசன்

ஹெக்ஸா டவுன்டவுன் அர்பன் எடிசன் காரில் கூடுதலாக புதிய பிரான்ஸ் நிற வண்ணத்தை பெற்ற இந்த வேரியன்டில் (Absolute) அப்சொலேட் ( XE, XM மற்றும் XMA வேரியன்ட்) மற்றும் இன்டல்ஜ் ( Indulge) (XT மற்றும் XTA) என இருவிதமான பேக்கேஜ் கொண்டதாக கிடைக்க உள்ளது.

இரு விதமான பேக்கேஜிலும் க்ரோம் பூச்சூ கொண்ட கிரில், ஹெட்லைட் அறை, டவுன்டவுன் பேட்ஜ், வயர்லெஸ் சார்ஜிங் வசதி, கார்பெட் செட், கார் கேர் கிட், 16 அங்குல டைமன்ட் கட் அலாய் வீல் கருப்பு & சில்வர் கிரே  ஆகியவற்றை பெற்றுள்ளது.

XE, XM மற்றும் XMA ஆகிய வேரியன்ட்களில் பிரவுன் நிற இருக்கைகளை பெற்றுள்ளது. XT மற்றும் XTA போன்ற உயர் ரக வேரியன்ட்களில் பிளாபுங்க்ட் 10.1 அங்குல பொழுதுபோக்கு சார்ந்த அம்சங்களை பெற்ற இரண்டு பிளேயர், ஹெட் அப் டிஸ்பிளே, ஸ்பீடு லிமிட் அலர்ட்ஸ், ஆகியவற்றை பெற்றுள்ளது.

தற்போது பயன்பாட்டில் உள்ள ஹெக்ஸா காரில் இருவிதமான ஆற்றலை வெளிப்படுத்தும் 156 bhp ஆற்றலை வெளிப்படுத்தும்  2.2 லிட்டர் வேரிகார் 400 டீசல் எஞ்சின் இடம் பெற்றிருக்கும். இதன் டார்க் 400 Nm ஆகும். இதில் 6 வேக மேனுவல் மற்றும் ஆட்டோ கியர்பாக்ஸ் இடம் பெற்றிருக்கும். 4 விதமான சூப்பர் டிரைவ் மோட்ஸ் இடம்பெற்றுள்ளது.

மேலும் வேரிகார் 320 டீசல் எஞ்சின் ஆப்ஷனில் 148 bhp பவரை வெளிப்படுத்தும். இதன் டார்க் 320Nm ஆகும். இதில் 5 வேக மேனுவல் மற்றும் 6 வேக மேனுவல் கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது.

சாதாரன மாடலை விட ரூ.45,000 வரை விலை அதிகரிக்கப்பட்டு டாடா ஹெக்ஸா டவுன்டவுன் அர்பன் எடிசன் ஆரம்ப விலை ரூ.12.18 லட்சத்தில் தொடங்குகின்றது.

Related Motor News

5 டன் பிரிவில் டாடா LPT 812 இலகுரக டிரக் விற்பனைக்கு வெளியானது

கார் முதல் உப்பு வரை டாடா குழுமத்தின் சாம்ராஜ்யத்தை உருவாக்கிய ரத்தன் டாடா

தமிழ்நாட்டில் JLR எலக்ட்ரிக் கார்களை தயாரிக்கும் டாடா மோட்டார்ஸ்

6 % வளர்ச்சியில் டாடா மோட்டார்ஸ் விற்பனை நிலவரம் FY23-24

டாடா எலக்ட்ரிக் கார்களின் விலை ரூ.1.20 லட்சம் வரை குறைப்பு

டாடா டிகோர் காரின் முக்கிய சிறப்பு அம்சங்கள்

Tags: Tata hexa Downtown urbanTata Motors
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

சிட்ரோயன் பாசால்ட் X

ரூ.12.89 லட்சத்தில் சிட்ரோயன் பாசால்ட் X கூபே எஸ்யூவி அறிமுகம்

maruti suzuki victoris rear view

மாருதி சுசுகியின் விக்டோரிஸ் பற்றி தெரிந்து கொள்ள வேண்டியவை

அல்கசாரில் நைட் எடிசனை வெளியிட்ட ஹூண்டாய் இந்தியா

ஹூண்டாய் க்ரெட்டா எலக்ட்ரிக் நைட் எடிசன் விற்பனைக்கு வெளியானது

2025 ஹூண்டாய் i20, i20 N-line நைட் எடிசன் வெளியானது

க்ரெட்டா எலக்ட்ரிக் ரேஞ்ச் அதிகரித்த ஹூண்டாய் மோட்டார்

ADAS உடன் மாருதி சுசுகி விக்டோரிஸ் எஸ்யூவி அறிமுகமானது

BNCAP-ல் 5 நட்சத்திர மதிப்பீட்டை பெற்ற மாருதி சுசுகி விக்டோரிஸ்

ADAS பாதுகாப்புடன் டாடா நெக்ஸான்.இவி விற்பனைக்கு அறிமுகமா.?

10 ஆண்டுகால கிங் க்ரெட்டா எடிசனை வெளியிட்ட ஹூண்டாய்

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan