Automobile Tamilan
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • Truck
  • TIPS
  • Bus
No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • Truck
  • TIPS
  • Bus
No Result
View All Result
Automobile Tamilan
No Result
View All Result

1 லட்சம் எலக்ட்ரிக் கார்களை தயாரித்த டாடா மோட்டார்ஸ்

by automobiletamilan
August 11, 2023
in கார் செய்திகள்
1
SHARES
0
VIEWS
ShareRetweet

tata ev

இந்தியாவின் முதன்மையான பயணிகள் எலக்ட்ரிக் வாகன தயாரிப்பாளரான டாடா மோட்டார்ஸ் வெற்றிகரமாக ஒரு லட்சம் பேட்டரி மின்சார வாகனங்களை தயாரித்து சாதனை படைத்துள்ளது. டாடா நிறுவனம் நெக்ஸான் இவி, டியாகோ இவி மற்றும டிகோர் இவி என மூன்று மாடல்களை தனநபர்களுக்கு விற்பனை செய்து வருகின்றது.

இந்தியாவின் ஒட்டுமொத்த தனிநபர் நான்கு சக்கர பயணிகள் எலக்ட்ரிக் வாகன விற்பனையில் டாடா மோட்டார்ஸ் 72 சதவீத சந்தை பங்களிப்பை கொண்ட முதன்மையான நிறுவனமாக விளங்குகின்றது.

Tata Motors EV

நெக்ஸான் இவி காரில் பொருத்தப்பட்டுள்ள 30.2 KWh பேட்டரி பேக் பொருத்தப்பட்டு 128 ஹெச்பி பவர் மற்றும் 254 Nm டார்க் வெளிப்படுத்தும். 0-60 கிமீ வேகத்தை எட்டுவதற்கு 4.5 விநாடிகளும், 0-100 கிமீ வேகத்தை வெறும் 9.9 விநாடிகளில் எட்டிவிடும். முழுமையான சிங்கிள் சார்ஜில் 312 கிமீ ரேஞ்சு தரவல்லதாக ARAI சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

நெக்ஸான் EV மேக்ஸ் காரின் பவர் 141bhp மற்றும் 250Nm டார்க் வழங்குகின்ற மின்சார மோட்டாருக்கு 40.5kWh பேட்டரி பேக் கொடுக்கப்பட்டுள்ளது. முழுமையான சிங்கிள் சார்ஜில் 453 கிமீ பயணிக்கலாம்.

315 கிமீ ரேஞ்சு வழங்கும் டிகோர் இவி மற்றும் டியாகோ இவி  பேட்டரி பேக் 26kWh லித்தியம் அயன் அதிகபட்சமாக 75hp மற்றும் 170Nm உற்பத்தி செய்யும் நிரந்தர காந்த ஒத்திசைவான மின்சார மோட்டாரைப் பயன்படுத்துகிறது.

1 லட்சம் எலக்ட்ரிக் வாகனங்களை தயாரிப்பினை கொண்டாடும் வகையில் வானத்தில் ஒளி விளக்கு மூலம் கொண்டாடியுள்ளது. 2018 ஆம் ஆண்டில், டாடா மாதத்திற்கு 100 EV தயாரித்தது. 2023-ல், இந்த எண்ணிக்கை மாதம் 10,000 EV ஆக உயர்ந்துள்ளது.

முதல் 10,000 இவி விற்பனை 44 மாதங்கள் எடுத்து கொண்ட நிலையில், அடுத்த 40,000 விற்பனை எண்ணிக்கை 15 மாதங்கள் எடுத்த நிலையில், மீதமுள்ள 50,000 விற்பனையானது 9 மாதங்கள் மட்டுமே எடுத்துக் கொண்டுள்ளது.

tata ev lighting in sky

Tags: Electric CarsTata Nexon EVTata Tiago EVTata Tigor EV
Automobile news in Tamil
  • auto
  • contact us
  • Privacy Policy
  • SiteMap

© 2023 Automobile Tamilan

No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • Truck
  • TIPS
  • Bus

© 2023 Automobile Tamilan