பிரபலமான டாடா ஹாரியர் எஸ்யூவி காரின் விலையை ரூ. 30,000 வரை அதிகபட்சமாக அனைத்து வேரியண்டுகளிலும் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் உயர்த்தியுள்ளது. அதிகரித்து உற்பத்தி செலவுகளால் விலை உயர்வினை தவிர்க்க முடியாத காரணமாக தெரிய வருகின்றது.
அதிகார்ப்பூர்வமாக டாடா நிறுவனம் எந்த அறிக்கையை வெளியிடாத நிலையில் அதிகாரப்பூர்வ ஹாரியர் வலைதளத்தின் விலை பட்டியிலில் உயர்த்தியுள்ளது தெரிய வந்துள்ளது.
ஹாரியர் எஸ்யூவி விலை மற்றும் சிறப்புகள்
விற்பனையில் கிடைக்கின்ற இந்த எஸ்யூவி மாடலில் 5 இருக்கை பெற்ற ஹேரியர் 2.0 லிட்டர் Kryotec டீசல் என்ஜின் கொண்டு அதிகபட்சமாக 140 பிஎச்பி பவர் மற்றும் 350 என்எம் டார்க் திறனை வழங்குவதுடன், இதில் 6 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் வழங்கப்படுகிறது.
பிஎஸ் 6 ரக மாடல் சோதனை செய்யப்படு வருவதனால் அடுத்த சில மாதங்களுக்குள் மீண்டும் ஒருமுறை விலை உயர்வினை ஹாரியர் சந்திக்க வாய்ப்புள்ளது. இந்தியாவில் விற்பனை செய்யப்படுகின்ற கிரெட்டா, காம்பஸ், மற்றும் மஹிந்திரா XUV5OO போன்ற மாடல்களுக்கும் அடுத்தப்படியாக விற்பனைக்கு வரவுள்ள எம்ஜி ஹெக்டர் எஸ்யூவி மாடலுக்கும் சவாலாக விளங்க உள்ளது.
ஹாரியரின் விலை பட்டியல் (எக்ஸ்-ஷோரூம் மும்பை)
XE ரூ.12.99 லட்சம்
XM ரூ. 14.05 லட்சம்
XT ரூ. 15.25 லட்சம்
XZ ரூ. 16.55 லட்சம்