Warning: Trying to access array offset on false in /home/automobiletamilancom/public_html/wp-content/plugins/jnews-amp/include/class/class-init.php on line 427

Warning: Trying to access array offset on false in /home/automobiletamilancom/public_html/wp-content/plugins/jnews-amp/include/class/class-init.php on line 428
ரூ.26,000 வரை கார்களின் விலையை உயர்த்திய டாடா மோட்டார்ஸ் | Automobile Tamilan

ரூ.26,000 வரை கார்களின் விலையை உயர்த்திய டாடா மோட்டார்ஸ்

92dcc tata altroz car red color 1

ஜனவரி 22 ஆம் தேதி முதல் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் அனைத்து கார்களும், எஸ்யூவி மாடல்களும் அதிகபட்சமாக ரூ.26,000 வரை விலை உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால் ஜனவரி 21 ஆம் தேதிக்கு முன்னர் முன்பதிவு மேற்கொண்டவர்களுக்கு விலை உயர்வு பொருந்தாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

பயணிகள் வாகன சந்தையில் டாடா நிறுவனம், டியாகோ, டிகோர், அல்ட்ராஸ், நெக்ஸான் மற்றும் ஹாரியர் ஆகிய மாடல்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. எலக்ட்ரிக் வாகன பிரிவில் நெக்ஸான் இவி விற்பனை செய்யப்படுகின்றது. இந்நிலையில், நேற்றைக்கு விலை அறிவிக்கப்படுவதாக வெளியிடப்பட்டிருந்த அல்ட்ராஸ் ஐ-டர்போ காரின் விலையை அறிவிக்கவில்லை.

ஒவ்வொரு மாடல் மற்றும் வேரியண்டிற்கு ஏற்ப விலை மாறுபடும். அதன் விபரம் முழுமையாக விரைவில் வெளியாகக்கூடும்.

டாடா நிறுவனம், தனது ஐகானிக் எஸ்யூவி பிராண்டான சஃபாரியை ஜனவரி மாதம் 26 ஆம் தேதி விற்பனைக்கு கொண்டு வரவுள்ளது.

Exit mobile version