டாடா மோட்டார்சின் சியரா விலைப் பட்டியல் வெளியானது.!

new sierra price list

டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் ஐகானிக் மாடலான சியரா மீண்டும் புதிதாக வந்துள்ள நிலையில் இரு பெட்ரோல் மற்றும் ஒரு டீசல் என மூன்று விதமான என்ஜினுடன் ரூ.11.49 லட்சம் முதல் டாப் வேரியண்ட் விலை ரூ.18.49 லட்சம் வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

Tata Sierra price

இன்னும் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் முழுவிலைப் பட்டியலை வெளியிடவில்லை, தற்பொழுது இரண்டாவது பட்டியலின் ஆரம்ப விலை மட்டுமே வெளியாகியுள்ளது. மூன்றாவது விலைப் பட்டியலில் Accomplished வேரியண்ட் வரிசை அடுத்த சில நாட்களில் டாடா வெளியிடலாம்.

என்ஜின் ஆப்ஷனை பொறுத்தவரை, 4 சிலிண்டருடன் கூடிய 1.5 லிட்டர் பெட்ரோல் ரெவோட்ரான் என்ஜின் பவர் 106ps மற்றும் 145 Nm டார்க் 6 வேக மேனுவல் மற்றும் 7 வேக டியூவல் கிளட்ச் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கொண்டுள்ளது.

டாப் வேரியண்டுகளில் உள்ள ஹைப்பர்ஐயன் 1.5 லிட்டர் 4 சிலிட்டர் TGDi டர்போ பெட்ரோல் என்ஜின் 6 வேக ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸூடன் பவர் 160ps மற்றும் 255 Nm டார்க் வெளிப்படுத்துகின்றது.

1.5 லிட்டர் டர்போ டீசல் Kyrojet என்ஜின் DEF ஆயில் இல்லாத LNT நுட்பத்துடன் கூடியதாக வந்துள்ள சியரா எஸ்யூவி பவர் 118ps மற்றும் 260 Nm டார்க் ஆனது 6 வேக மேனுவல் மாடலும் 280Nm டார்க்கினை 6 வேக ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கொண்டுள்ளது.

Exit mobile version