Automobile Tamilan

BNCAP கிராஷ் டெஸ்டில் 5 ஸ்டார் ரேட்டிங்கை பெற்ற டாடா நெக்ஸான்.இவி

tata nexon.ev crash test

டாடா மோட்டார்சின் 2 எலக்ட்ரிக் கார்களுக்கான பாரத் NCAP சோதனைக்கு உட்படுத்தப்பட்டு இருக்கின்றது. இதில் இரண்டு மாடல்களும் அதாவது நெக்ஸான்.இவி மற்றும் பஞ்ச்.இவி என இரண்டும் தற்பொழுது 5 ஸ்டார் மதிப்பீடு பெற்றுள்ளன.

Tata Nexon.ev Crash Test

இந்தியாவின் அதிகாரப்பூர்வ BNCAP சோதனையானது முதன்முறையாக சஃபாரி மற்றும் ஹாரியர் கார்களுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பாக நடைபெற்ற நிலையில் தற்போது முதல் முறையாக எலக்ட்ரிக் வாகனங்களின் விபரமானது சோதனை செய்யப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது.

இந்தியாவில் அதிகம் விற்பனையாகின்ற நெக்ஸான் எலக்ட்ரிக் காரில் சோதனை செய்யப்பட்டதில் அதிகபட்சமாக வயது வந்தோருக்கான பாதுகாப்பில் 32 புள்ளிகளை பெறுவதற்கு 29.86 புள்ளிகளை பெற்று 5 நட்சத்திரம் மதிப்பீட்டை வயது வந்தோர் பிரிவில் நெக்ஸானது பெற்றிருக்கின்றது முன்புற ஆப்செட் மோதல் மற்றும் பேரியர் டெஸ்டில் ( Deformable Barrier Test) பெறவேண்டிய 16 புள்ளிகளுக்கு 14.26 புள்ளிகளை பெற்றும், இறுதியாக நகரும் பேரியர் (Movable Deformable Barrier Test) கொண்டு சோதனை செய்யப்பட்டதில் 16 புள்ளிகளுக்கு 15.60 புள்ளிகளை பெற்று அனைத்து விதமான மோதல்களுக்கும் உட்படுத்தப்பட்டுள்ளது.

அடுத்து குழந்தைகளுக்கான பாதுகாப்பு தொடர்பாக சோதனை செய்யப்பட்டதில் பெறவேண்டிய 24 புள்ளிகளுக்கு 23.95 புள்ளிகள் பெற்றுள்ளது மேலும் இதனுடைய சைல்ட் ரெஸ்டின் சிஸ்டம் (Child Restraint System) 12க்கு 12 பெற்று அசத்தியுள்ளது.

Exit mobile version