Automobile Tamilan

7 லட்சம் நெக்ஸான் எஸ்யூவிகளை விற்பனை செய்த டாடா மோட்டார்ஸ்

tata nexon

டாடா மோட்டார்சின் பிரசித்தி பெற்ற நெக்ஸான் எஸ்யூவி கார் 7 லட்சம் விற்பனை இலக்கை கொண்டாடும் வகையில் தனது மாடல்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் வரை சலுகையே அறிவித்துள்ளது. இந்த குறிப்பிட்ட சலுகை ஆனது ஜூன் 30 வரை மட்டுமே கிடைக்க உள்ளது.

காரை முன்பதிவு செய்தவர்களுக்கும், அதை வாங்கத் திட்டமிடுபவர்களுக்கும் டாடா அதிகபட்சமாக ஒரு லட்சம் வரை சலுகை வழங்குகின்றது. இந்த சலுகை வேரியண்ட் வாரியாக மாறுபடக்கூடும்.

கடந்த 2017 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட நெக்ஸான் ஆனது தொடர்ந்து சிறப்பான வரவேற்பினை பெற்றிருப்பதுடன் போட்டியாளர்களான நான்கு மீட்டருக்கு குறைந்த நீளம் உள்ள பல்வேறு கார்களை எதிர்கொண்டாலும் கூட தொடர்ந்து தனது முதலிடத்தை கடந்த மூன்று ஆண்டுகளுக்கு மேலாக தக்கவைத்துக் கொண்டு தற்பொழுது விற்பனை எண்ணிக்கையானது ஏழு லட்சத்தை கடந்திருக்கின்றது.

சுமார் 99 வேரியண்டுகளை கொண்டுள்ள இந்த மாடலில் இரண்டு பெட்ரோல் மற்றும் ஒரு டீசல் என மூன்று விதமான எஞ்சின் ஆப்ஷனை கொண்டிருக்கின்றது. இதன் அட்டிப்படையில் எலக்ட்ரிக் காரும் இந்தியாவின் அதிகம் விற்பனை ஆகின்ற எலக்ட்ரிக் மாடலாக உள்ளது. மேலும் மிகவும் பாதுகாப்பான கார் என்று மதிப்பீட்டைப் GNCAP மூலம் பெற்ற காராகவும் விளங்குகின்றது.

Exit mobile version