Automobile Tamilan

குறைந்த விலையில் வந்த டாடா நெக்சானின் சிறப்பு அம்சங்கள்

nexon suv front

மஹிந்திராவின் XUV 3XO அறிமுகத்தை தொடர்ந்து டாடா மோட்டார்சின் நெக்ஸான் எஸ்யூவி மாடலின் பெட்ரோல் என்ஜினில் Smart (O) வேரியண்ட் விலை ரூ.7.99 லட்சத்தில் துவங்குவதுடன் டீசல் என்ஜின் பெற்ற மாடலில் இரண்டு புதிய வேரியண்டுகளை விற்பனைக்கு வெளியிட்டுள்ளது.

சமீபத்தில் வெளியான ரூ.7.49 லட்சத்தில் வெளியான எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ போட்டியாளருக்கு எதிராக வெளியிடப்பட்டுள்ள குறைவான விலை கொண்ட பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின் வேரியண்ட் விபரம் பின் வருமாறு ;-

கூடுதலாக பெட்ரோல் என்ஜின் பெற்ற Smart+  வேரியண்ட் விலை ரூ.31,000 மற்றும் Smart+S விலை ரூ.41,000 வரை குறைக்கப்பட்டுள்ளது.

அடிப்படையாகவே டாடா நெக்சானின் அனைத்து வேரியண்டிலும் 6  ஏர்பேக்குகள், எலக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி புரோகிராம் வசதி இடம்பெற்றுள்ளது.

புதிய Smart (O) வேரியண்டில் எல்இடி ஹெட்லேம்ப், டெயில்லைட் எல்இடி, 2 ஸ்போக் ஸ்டீயரிங்கில் ஒளிரும் டாடா லோகோ, முன்பக்கத்தில் பவர் விண்டோஸ், ரிவர்ஸ் சென்சார் உள்ளிட்ட வசதிகளை பெற்றுள்ளது.

Smart+ வேரியண்டில்  7 அங்குல இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்பிளே, பவர் விண்டோஸ், 4 ஸ்பீக்கர்கள் உள்ளிட்ட வசதிகளுடன் ரிவர்ஸ் கேமரா பெற்றுள்ளது.

கூடுதல் வசதிகளாக Smart+ S வேரியண்டில் சன்ரூஃப், ஆட்டோ ஹெட்லேம்ப் மற்றும் ஆட்டோ வைப்பர் உள்ளது.

120hp பவரையும், 170Nm டார்க் வழங்கும் 1.2-லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் ஆனது 5-ஸ்பீடு மேனுவல், 6-ஸ்பீடு மேனுவல், 6-ஸ்பீடு AMT மற்றும் 7- வேக டிசிடி ஆகியவற்றில் கிடைக்கின்றது.  115hp பவர் மற்றும் 160Nm டார்க் வெளிப்படுத்தும் 1.5-லிட்டர் டீசல் என்ஜின் ஆனது, 6-ஸ்பீடு மேனுவல் அல்லது 6-ஸ்பீடு AMT பெற்றுள்ளது.

Exit mobile version