சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட எக்ஸ்டர் சிஎன்ஜி எஸ்யூவிக்கு போட்டியாக பஞ்ச் சிஎன்ஜி அடுத்த சில வாரங்களுக்குள் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகின்றது. கூடுதலாக சன்ரூஃப் பெற்றதாகவும் வரவுள்ளது.
சிஎன்ஜி ஆப்ஷனை பெற உள்ள பஞ்ச் ஆனது டூயல் சிலிண்டர் பெற்றதாகவும், மிக சிறப்பான மைலேஜ் வழங்கும் மாடலாகவும் விளங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த பிரிவில் முதன்மையான எஸ்யூவி காராக பஞ்ச் விளங்கி வருகின்றது.
Tata Punch iCNG
எக்ஸ்டெர் சிஎன்ஜிக்கு போட்டியாக வரவிருக்கும் பஞ்ச் சிஎன்ஜி காரில், பெட்ரோலில் இயங்கும் அதே 1.2 லிட்டர், மூன்று சிலிண்டர் என்ஜினை கொண்டிருக்கும். இன்ஜின் பெட்ரோலுடன் 86hp மற்றும் 113Nm டார்க், CNG உடன் வரும்பொழுது, 77hp மற்றும் 97Nm டார்க் வெளிப்படுத்துகிறது. இது 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸுடன் மட்டுமே இணைக்கப்படும். இந்த டியாகோ, டிகோர் மற்றும் அல்ட்ராஸ் போலவே இந்த மாடலையும் சிஎன்ஜியில் ஸ்டார்ட் செய்யலாம். இந்த அம்சம் போட்டியாளர்களால் வழங்கப்படவில்லை.
மற்றபடி, தோற்ற அமைப்பில் எந்த மாற்றமும் இல்லை, இன்டிரியரில் பெரும்பாலான வசதிகளிலும் எந்த மாற்றமும் இருக்காது.
வரும் ஆகஸ்ட் மாத முதல் வாரத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம்.