Automobile Tamilan

டாடா பஞ்ச் எலக்ட்ரிக் எஸ்யூவி சோதனை ஓட்டம்

விற்பனையில் உள்ள டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் பஞ்ச் எஸ்யூவி காரின் அடிப்படையில் எலக்ட்ரிக் கார் மாடலாக சாலை சோதனை ஓட்டத்தில் ஈடுபடுவதற்காக தயாரிக்கப்பட்டுள்ள படங்கள் இணையத்தில் கசிந்துள்ளது.

கடந்த 20 மாதங்களுக்கு முன்பாக விற்பனைக்கு வந்த பஞ்ச் எஸ்யூவி உற்பத்தி 2,00,000 எண்ணிக்கை  இலக்கை எட்டியுள்ளது. மேலும் துவக்க நிலை சந்தையில் அமோகமான வரவேற்பினை பஞ்ச் பெற்றுள்ளது.

Tata Punch EV

சோதனை ஓட்டத்தில் உள்ள பஞ்ச் எலக்ட்ரிக் மாடல் விற்பனையில் உள்ள ICE காரை போலவே அமைந்துள்ளது. முன்புற பம்பர் பகுதியில் சார்ஜிங் செய்வதற்காக போர்ட் வழங்கப்பட்டுள்ளது.

இன்டிரியர் அமைப்பில் ரோட்டரி டயல், எலக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக் ஆகியவற்றை கொண்டுள்ளது. தற்பொழுது பெட்ரோல் என்ஜின் மாடலை போலவே உள்ள நிலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யும் பொழுது பல்வேறு மாற்றங்கள் கொண்டிருக்கும்.

விற்பனையில் உள்ள டியாகோ.ev காரில் உள்ள பவர்டிரெயின் ஆப்ஷனை பகிர்ந்து கொள்ள உள்ளது. பஞ்ச் எலக்ட்ரிக் காரில் 24 kWh பேட்டரி பேக் கொடுக்கப்பட்டு அதிகபட்சமாக 315Km/charge மற்றும் 19.2 kWh பேட்டரி பேக் கொடுக்கப்பட்டு அதிகபட்சமாக 15Km/charge ஆக இரண்டு ஆப்ஷனை பெறக்கூடும்.

இந்த மாடல் விற்பனைக்கு வரும்பொழுது குறைவான விலையில் வெளியிடப்படும் என்பதனால், டாடா பஞ்ச் எலக்ட்ரிக் விலை 8 லட்சத்திற்குள் துவங்கலாம். இந்த காருக்கு போட்டியாக எம்ஜி காமெட் EV மற்றும் சிட்ரோன் eC3 போன்றவை கிடைக்கும்.

image source – instagram/photulogy

Exit mobile version