இந்தியாவில் மிக வேகமாக முன்பதிவு செய்யப்பட்ட எலக்ட்ரிக் கார்களில் டாடா டியாகோ.ev கார் விற்பனைக்கு வந்த நான்கு மாதங்களில் 10,000 வாகனங்கள் டெலிவரி வழங்கப்பட்டுள்ளது.
₹ 8.69 லட்சம் முதல் ₹ 11.99 லட்சம் வரை இரு விதமான பேட்டரி ஆப்ஷனில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. முன்பதிவு துவங்கப்பட்ட 24 மணி நேரத்தில் 10,000 எலக்ட்ரிக் கார்களை பதிவு செய்துள்ளனர்.
Tata Tiago.ev
இந்தியா முழுவதும் 491 நகரங்களில் விற்பனை செய்யப்பட்டு கார்களில் 1.6 மில்லியன் கிராம் CO2 உமிழ்வை சேமித்து மொத்தமாக இந்த டியாகோ எலக்ட்ரிக் 11.2 மில்லியன் கிலோமீட்டர் கடந்துள்ளதாக டாடா மோட்டார்ஸ் குறிப்பிட்டுள்ளது.
டாடா அறிக்கையின்படி, டியாகோ எலக்ட்ரிக் வாகனங்களில் 1,200 கார்கள் 3,000 கிமீக்கு கூடுதலாகவும், 600க்கு மேற்பட்ட கார்கள் 4,000 கிமீக்கு மேல் இயக்கப்பட்டுள்ளன. 90 சதவீதத்திற்கு மேல் சார்ஜ் செய்வது வீட்டில் உள்ள சார்ஜர் மூலமாக செய்யப்படுகிறது.
ICE என்ஜின் டியாகோ கார்களுடன் ஒப்பிடும் போது ரூ.7 கோடி மதிப்பில் சேமிக்க எலக்ட்ரிக் கார்கள் உதவியுள்ளதாக டாடா மோட்டார்ஸ் குறிப்பிட்டுள்ளது.
24 kWh பேட்டரி பேக் கொடுக்கப்பட்டு அதிகபட்சமாக 315 கிமீ மற்றும் 19.2 kWh பேட்டரி பேக் கொடுக்கப்பட்டு அதிகபட்சமாக 250 கிமீ ஆக உள்ளது.
Tata Motors | Tiago.ev XE, XT | Tiago.ev |
---|---|---|
பேட்டரி திறன் | 19.2 kWh battery | 24 kWh battery |
மோட்டார் பவர் | 61 PS | 74.7 PS |
மோட்டார் டார்க் | 310 Nm | 150 Nm |
Range (MIDC) | 250 km | 315 km |
Real Driving Range | 170 km | 210-250 km |
அதிகபட்ச வேகம் | 120 km/h | 120 km/h |
Acceleration | 0-60 kmph in 6.2 seconds | 0-60 kmph in 5.7 seconds |
சார்ஜிங் நேரம் | 50Kw DC FC 10-80% charge in 59 minutes
15amp 10-100% in 9:40 hrs |
50Kw DC FC 10-80% charge in 59 minutes
15amp 10-100% in 9:40 hrs |
2023 டாடா டியாகோ.ev காரின் தமிழ்நாடு ஆன்-ரோடு விலை ₹ 9.12 லட்சம் முதல் ₹ 12.65 லட்சம் வரை கிடைக்கின்றது. இந்த மாடலுக்கு வாரண்டி 3 வருடம் அல்லது 1,25,000 km , பேட்டரி பேக் மற்றும் எலக்ட்ரிக் மோட்டாருக்கு 8 வருடம் அல்லது 1,60,000 km வழங்கப்பட்டுள்ளது.
இதுவரை டியாகோ.ev காருக்கு நிகரான போட்டியாளர் இல்லையென்றாலும், சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட எம்ஜி காமெட் எலக்ட்ரிக் கார் சற்று சவாலானதாக விளங்கும்.