வரும் அக்டோபர் 4 ஆம் தேதி அறிமுகம் செய்யப்படுகின்ற டாடா பஞ்ச் எஸ்யூவி காரின் மீதான எதிர்பார்ப்பு பரவலாக அதிகரித்துள்ளது. பட்ஜெட் விலையில் ஸ்டைலிஷாக அமைந்துள்ள இந்த காரில் பல்வேறு சிறப்பம்சங்களை பெற்றிருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
மிகவும் எதிர்பார்க்கப்படுகின்ற பஞ்ச் எஸ்யூவி காரின் அறிமுகம் தீபாவளிக்கு முன்பாக விலை அறிவிக்கப்பட உள்ளது. அதனை தொடர்ந்து உடனடியாக விநியோகம் செய்ய டாட்டா மோட்டார்ஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
பன்ச் எஸ்யூவி காரில் இடம்பெற உள்ள இன்ஜின் ஆப்ஷனை பொறுத்தவரை, 86 ஹெச்பி பவரை வழங்கும் 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் பொருத்தப்படலாம். அடுத்தப்படியாக சற்று கூடுதல் பவரை வழங்கும் டர்போ பெட்ரோல் இன்ஜின் பெற்று 5 வேக மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் மேனுவல் கியர்பாக்ஸ் இணைக்கப்படும். ஆனால் டீசல் என்ஜின் இடம் பெறாது.
சமீபத்தில் இன்டிரியர் மற்றும் பல்வேறு ஸ்பை படங்கள் மூலம் அதாவது டீலர்களுக்கு வந்துள்ள கார்களில் டேஸ்போர்டு, இருக்கை அமைப்புகள் உட்பட பல்வேறு வசதிகள் வெளியாகியுள்ளது.
இந்த காருக்கான முன்பதிவுகளை டாடா மோட்டார்ஸ் இன்னும் அதிகாரப்பூர்வமாக துவங்கப்படவில்லை. இருப்பினும், பல டீலர்கள் ஏற்கனவே மைக்ரோ-எஸ்யூவிக்கு முன்பதிவுகளை துவங்கிவிட்டார்கள்.