
மிகுந்த எதிர்பார்ப்புக்குள்ளான டாடா மோட்டார்சின் ஹாரியர் மற்றும் சஃபாரி எஸ்யூவிகளில் பெட்ரோல் வெர்ஷன் குறித்த விவரங்களை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. டீசல் இன்ஜின்களில் மட்டுமே கிடைத்து வந்த இரு கார்களும், விரைவில் புதிய பெட்ரோல் இன்ஜின் மற்றும் கூடுதல் சிறப்பம்சங்களுடன் விரைவில் விலை அறிவிக்கப்பட உள்ளது.
Tata Safari and Harrier Petrol
புதிய டாடா சியராவில் உள்ள அதே Hyperion இன்ஜின் ஆனது இரண்டு கார்களுக்கும் வலிமை சேர்ப்பதாக மட்டுமல்லாமல் சியராவை விட, ஹாரியர் மற்றும் சஃபாரியின் எடை மற்றும் செயல்திறனுக்கு ஏற்றதாக கூடுதலாக 10hp பவர் மற்றும் 25Nm டார்க் மேம்படுத்தப்பட்டுள்ளது.
1.5 லிட்டர் ஹைப்பர்ஐயன் டர்போ பெட்ரோல் ஆனது 170 hp பவர் மற்றும் 280 Nm ஆக உள்ள நிலையில் 6 வேக மேனுவல் மற்றும் 6 வேக ஆட்டோமேட்டிக் என இரண்டிலும் கிடைக்க உள்ளது.

வேரியண்ட் விபரம்
சஃபாரியில் ஸ்மார்ட், ப்யூர், அட்வென்ச்சர் ஆகியவற்றுடன் பெட்ரோலுக்கான Accomplished Ultra என்ற புதிய மாடல் இணைந்துள்ளது. அதே போல ஹாரியரில் ஸ்மார்ட் , ப்யூர், அட்வென்ச்சர், ஃபியர்லெஸ் ஆகியவற்றுடன் புதிதாக Fearless Ultra என்ற டாப்-எண்ட் மாடல் சேர்க்கப்பட்டுள்ளது.
பொதுவாக இரு மாடல்களிலும், சாம்சங் 14-இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், டால்பி அட்மோஸ், இன்-பில்ட் டேஷ் கேம் கொண்ட டிஜிட்டல் இன்டீரியர் ரியர்வியூ மிரர் (IRVM), வெள்ளை மற்றும் பழுப்பு நிற டூயல்-டோன் இன்டீரியர் தீம், ஆன்-போர்டு நேவிகேஷன், வெளிப்புற ரியர்வியூ மிரர்களுக்கான (ORVMகள்) மெமரி செயல்பாடு மற்றும் 65W டைப்-சி போர்ட் ஆகியவை உள்ளன.
இந்த ஹாரியர் எஸ்யூவி டார்க், ஸ்டீல்த் மற்றும் ரெட் டார்க் பதிப்புகளிலும் கிடைக்கிறது, இவை காஸ்மெடிக் மேம்பாடுகளைப் பெறுகின்றன. ஹாரியர் இப்போது ஃபியர்லெஸ் எக்ஸ் டார்க், ஃபியர்லெஸ் எக்ஸ்+ டார்க், ஃபியர்லெஸ் எக்ஸ்+ ஸ்டீல்த் மற்றும் ஃபியர்லெஸ் அல்ட்ரா ரெட் டார்க் டிரிம்களில் 19-இன்ச் அலாய் வீல்களுடன் வருகிறது.
தங்கம் மற்றும் வெள்ளை நிறத்திலான கலவையை பெற்ற சஃபாரியில் உட்புறத்துடன் ஏற்கனவே 19-இன்ச் அலாய் வீல்களுடன் கிடைக்கிறது. ஹாரியரைப் போலவே, இந்த மாடலும் டார்க், ஸ்டீல்த் மற்றும் ரெட் டார்க் பதிப்புகளில் வருகிறது.


