
மீண்டும் சியரா பெயர் மட்டுமல்லாமல் ஐகானிக்கான அந்த பழைய தோற்றத்தை நினைவுப்படுத்தும் வகையில், குறிப்பாக நடுத்தர எஸ்யூவி சந்தைக்கு ஏற்றதாக மிகவும் சிறப்பான இடவசதி கொண்டதாகவும் டாடா சியராவின் ஆரம்ப விலை ரூ. 11.49 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) எனவும், உயர்தர மாடலின் விலை ரூ. 21.29 லட்சம் எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில் முதல் நாளிலே 70,000 புக்கிங் செய்யபட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
டாடா மோட்டார்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், 70,000 பேர் முழுமையாக முன்பதிவு செய்துள்ளதாகவும், மேலும் 1.35 லட்சத்திற்கும் அதிகமானோர் தங்கள் விருப்பத் தேர்வுகளை (Configuration) சமர்ப்பித்து முன்பதிவு செய்யும் வரிசையில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய வாகன வரலாற்றில் ஒரு கார் அறிமுகமான முதல் நாளிலேயே இவ்வளவு பெரிய வரவேற்பைப் பெறுவது இதுவே முதன்முறையாகும்.
மற்றபடி, இந்த புதிய சியரா காரில் 1.5 லிட்டர் பெட்ரோல், 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் என மூன்று வகை ஆப்ஷனிலும் மேனுவல், ஆட்டோமேட்டிக் கிடைக்கிறது. டாப் வேரியண்டின் உட்புறத்தில் மூன்று பெரிய திரைகள், பெரிய பனோரமிக் சன்ரூஃப் , மற்றும் லெவல்-2 ADAS பாதுகாப்பு தொழில்நுட்பம் போன்றவற்றுடன் 6 காற்றுப்பைகள் மற்றும் 360 டிகிரி கேமரா என பாதுகாப்பிலும் இது சிறந்து விளங்குகிறது.
இந்த மாடலுக்கு போட்டியாக ஹூண்டாய் க்ரெட்டா, செல்டோஸ், டாடா கர்வ், ஹோண்டா எலிவேட், எம்ஜி ஹெக்டர், மஹிந்திரா ஸ்கார்ப்பியோ மற்றும் எலிவேட் என பல மாடல்கள் உள்ளன.