டெஸ்லா எலெக்ட்ரிக் கார் தயாரிப்பாளரின், புதிய சைபர்டிரக் (CyberTruck) என்ற பெயரிலான பிக்கப் டிரக் மாடல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. முற்றிலும் மாறுபட்ட வடிவமைப்பினை பெற்றுள்ள சைபர்டிரக்கினை விற்பனைக்கு 2022 ஆம் ஆண்டில் வெளியிட வாய்ப்புகள் உள்ளது.
மிகவும் மாறுபாடான கட்டமைப்பினை கொண்ட இந்த பிக்கப் டிரக் மாடலில் 30 எக்ஸ் குளிருட்டப்பட்ட எஃகு மூலம் கட்டப்பட்டிருப்பதாக இந்நிறுவனம் கூறுகிறது. இந்த அலாய் முன்பாக இந்நிறுவனத்தின் ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட்டில் பயன்படுத்தப்பட்டதாகும். இதன் காரணமாக டென்டை எதிர்க்கும் திறன் கொண்டிருப்பதுடன் 9 மிமீ தோட்டாக்களை தாங்கக்கூடியதாகவும் இந்த கட்டுமானம் விளங்க உள்ளது. அறிமுக நிகழ்வில் ஒரு சம்முட்டியைக் கொண்டு காரின் பாடி தரத்தை நிரூபித்து காட்டியுள்ளது.
சைபர்டிரக் மாடலில் மூன்று விதமான மின்சார பவர் ட்ரெயினை பெற உள்ளது. ஒற்றை மோட்டார் கொண்ட ரியர் வீல் டிரைவ் முழுமையான சிங்கிள் சார்ஜில் 402 கிமீ ரேஞ்சு வழங்க வல்லதாக விளங்கும். மேலும் 0-96 கிமீ வேகத்தை 6.5 விநாடிகளில் எட்டும் திறனை கொண்டிருக்கும். இந்த வேரியண்ட் அதிகபட்சமாக 3400 கிலோ திறனை இழுக்கும் சக்தியை கொண்டிருக்கும்.
அடுத்து, இரண்டு மோட்டார் கொண்ட ஆல் வீல் டிரைவ் முழுமையான சிங்கிள் சார்ஜில் 482 கிமீ ரேஞ்சு வழங்க வல்லதாக விளங்கும். இந்த வேரியண்ட் அதிகபட்சமாக 4535 கிலோ திறனை இழுக்கும் சக்தியை கொண்டிருக்கும். மேலும் 0-96 கிமீ வேகத்தை 4.5 விநாடிகளில் எட்டும் திறனை கொண்டிருக்கும்.
இறுதியாக, உயர்தரமான மூன்று எலெக்ட்ரிக் மோட்டார் பெற்ற ஆல் வீல் டிரைவ் முழுமையான சிங்கிள் சார்ஜில் 804 கிமீ ரேஞ்சு வழங்க வல்லதாக விளங்கும். மேலும் 0-96 கிமீ வேகத்தை 2.9 விநாடிகளில் எட்டும் திறனை கொண்டிருக்கும்.
6 இருக்கைகளை பெற்ற சைபர் டிரக் மாடலில் 1.5 டன் எடை தாங்கும் திறனுடன், மூன்று மோட்டார் பெற்ற மாடல் 6.4 டன் எடையை இழுத்துச் செல்லும் திறன் கொண்டதாகவும் விளங்க உள்ளது. ஏறக்குறைய உற்பத்திக்கு சைபர் டிரக் மாடல் 2021 ஆம் ஆண்டின் இறுதியில் கொண்டு செல்ல டெஸ்லா திட்டமிட்டுள்ளது.