தமிழ்நாடு உட்பட அனைத்து இந்திய மாநிலங்களிலும் தற்பொழுது டெஸ்லா மாடல் ஒய் காருக்கான முன்பதிவு அதிகாரப்பூர்வமாக இந்நிறுவனம் துவங்கியுள்ளது. புக்கிங் கட்டணமாக ரூ.22,220 பதிவு செய்த பின்னர் அடுத்த 7 நாட்களுக்குள் ரூ.3,00,000 செலுத்த வேண்டும். புக்கிங் கட்டணத்தை திரும்ப பெற இயலாத வகையில் முன்பதிவு நடைபெறுகின்றது.
குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் கூடுதலாக மற்ற மாநிலங்களை பொறுத்தவரை இன்னும் சில மாதங்கள் டெஸ்லாவுக்கு காத்திருக்க வேண்டும் என எதிர்பார்க்கப்பட்டிருந்த நிலையில் தற்போது உடனடியாகவே முன்பதிவு துவங்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் டெஸ்லா மாடல் ஓய் ஆன்ரோடு விலை
- Model Y RWD Standard – ₹ 61,07,190
- Model Y RWD Long Range – ₹ 69,14,750
குறிப்பாக தமிழ்நாடு மட்டுமல்ல மற்ற மாநிலங்கள் அனைத்திற்கும் டெஸ்லா காரினை நேரடியாக வீட்டிற்கே டெலிவரி வழங்க திட்டமிட்டுள்ள இந்நிறுவனம், இதற்கு கூடுதலாக ரூ.50,000 (18% ஜிஎஸ்டி வரி உட்பட) வசூலிக்கின்றது. இதற்கு காரணமாக மற்ற மாநிங்களுக்கு டிரக்குகள் மூலம் டெலிவரி வழங்க திட்டமிட்டுள்ளது.
மற்ற மாநில்களுக்கு முன்பதிவு துவங்கப்பட்டாலும், முன்னிரிமை மும்பை, டெல்லி, புனே மற்றும் குருகிராம் பகுதிகளுக்கு வழங்கப்படும் என தனது X பக்கத்தில் குறிப்பிட்டுள்ளது.
கொடுக்கப்பட்டுள்ள அடிப்படையான விலையை தவிர, நிறங்கள், இன்டீரியர் ஆப்ஷன் மற்றும் FSD போன்றவற்றுக்கு கூடுதலாக கட்டணத்தை டெஸ்லா வசூலிக்கின்றது.