கடந்த ஜூன் 2023 மாதந்திர பயணிகள் வாகன விற்பனை முடிவில், டாப் இடங்களை பிடித்த கார்களை பற்றி அறிந்து கொள்ளலாம். முதலிடத்தில் மாருதி சுசூகி வேகன் ஆர் 17,481 யூனிட்களை விற்பனை செயுதுள்ளது.
நாட்டின் முதன்மையான கார் தயாரிப்பாளான மாருதி சுசூகி டாப் 10 இடங்களில் 6 இடங்களை பெற்றுள்ளது. குறிப்பாக எஸ்யூவி கார்களான பிரெஸ்ஸா மற்றும் கிராண்ட் விட்டாரா ஆகியவை இடம்பெற்றுள்ளது.
Top 10 Selling Cars – June 2023
மாருதி நிறுவனத்தை தவிர ஹூண்டாய் கிரெட்டா , வெனியூ, அடுத்து டாடா மோட்டார்ஸ் நெக்ஸான் மற்றும் பஞ்ச் ஆகியவை டாப் 10 பட்டியலில் உள்ளன. இந்த பட்டியலில் மொத்தமாக 6 எஸ்யூவிகள் இடம்பெற்றுள்ளன.
Rank | OEM | Model | June’23 | June’22 | Y o·Y |
1 | Maruti Suzuki | Wagon R | 17,481 | 19,190 | -8.91% |
2 | Maruti Suzuki | Swift | 15,955 | 16,213 | 1.59% |
3 | Hyundai | Creta | 14,447 | 13,790 | 4.76% |
4 | Maruti Suzuki | Baleno | 14,077 | 16,103 | -12.58% |
5 | Tata | NEXON | 13,827 | 14,295 | -3.27% |
6 | Hyundai | venue | 11,606 | 10,321 | 12.45% |
7 | Maruti Suzuki | Alto | 11,323 | 13,790 | -17.89% |
8 | Tata | Punch | 10,990 | 10,414 | 5.53% |
9 | Maruti Suzuki | Brezza | 10,578 | 4,404 | 140 % |
10 | Maruti Suzuki | Vitara | 10,486 | – | – |
எஸ்யூவி ரக சந்தையில் ஹூண்டாய் கிரெட்டா அமோக வரவேற்பினை பெற்று மே 2023-ல் மொத்தமாக 14,447 எண்ணிக்கையை பதிவு செய்துள்ளது. வெனியூ, பஞ்ச், பிரெஸ்ஸா மற்றும் நெக்ஸான், விட்டாரா ஆகியவை பட்டியலில் உள்ளது.