மைல்டு ஹைபிரிட் சிஸ்டத்தை பெற்ற டொயோட்டா நிறுவனத்தின் ஃபார்ச்சூனர் நியோ டிரைவ் 48V மற்றும் லெஜெண்டர் நியோ டிரைவ் 48V என இரு மாடல்களின் விலை முறையே ரூ.44,72,000 முதல் ரூ. 50,09,000 எக்ஸ்ஷோரூம் ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
பிரீமியம் எஸ்யூவி சந்தையில் முதன்முறையாக நியோ டிரைவ் 48V மூலமாக மேம்பட்ட எரிபொருள் திறன் மற்றும் மேம்பட்ட ஓட்டுநர் செயல்திறனை வழங்க வடிவமைக்கப்பட்ட பிரிவு-முதல் 48-வோல்ட் ஹைபிரிட் தொழில்நுட்பம் இடம்பெற்றுள்ளது.
டொயோட்டாவின் 2.8 லிட்டர், 4-சிலிண்டர் டர்போ-டீசல் எஞ்சின், உடன் ஒருங்கிணைந்த ஸ்டார்டர் ஜெனரேட்டர் மற்றும் லித்தியம்-அயன் பேட்டரியை உள்ளடக்கிய 48-வோல்ட் அமைப்புடன் இணைக்கப்பட்டுள்ளது. ஹைபிரிட் உதவி தொழில்நுட்பத்தின் மூலம் மிகச் சிறப்பான மைலேஜ் வழங்கவும், ரீஜெனேரேட்டிவ் பிரேக்கிங் மூலம் மேம்படுத்தப்பட்ட எரிபொருள் சிக்கனத்தை வழங்குகிறது.
ஆஃப் ரோடு சாகசங்களுடன் மல்டி-டெரெய்ன் செலக்ட் சிஸ்டத்தை பெற்றதாகவும், ஃபார்ச்சூனர் மற்றும் லெஜெண்டர் நியோ டிரைவ் என இரண்டிலும் 360-டிகிரி பனோரமிக் கேமரா மற்றும் வயர்லெஸ் ஸ்மார்ட்போன் சார்ஜரை பெற்றிருப்பதுடன், பாதுகாப்பு அம்சங்களில் 7 ஏர்பேக்குகள், ஏபிஎஸ், பிரேக் அசிஸ்டுடன் கூடிய விஎஸ்சி, ஹில் அசிஸ்ட், டிஆர்சி, வில் கான்செப்ட் இருக்கைகள், ஐஎஸ்ஓஃபிக்ஸ் மற்றும் அவசரகால கதவு திறக்கும் வசதி ஆகியவற்றை கொண்டுள்ளது.
இந்த எஸ்யூவி மாடல்களுக்கு ஐந்து வருட இலவச சாலையோர உதவி மற்றும் மூன்று வருட/100,000 கிமீ உத்தரவாதத்துடன் வருகின்றன. மேலும், ஐந்து ஆண்டுகள் அல்லது 220,000 கிமீ வரை நீட்டிக்கப்படலாம், இது தனிப்பயனாக்கக்கூடிய டொயோட்டா ஸ்மைல்ஸ் பிளஸ் சேவை தொகுப்பால் கூடுதலாக வழங்கப்படுகிறது.
2009 ஆம் ஆண்டு முதல் விற்பனையில் உள்ள ஃபார்ச்சூனர் மற்றும் கூடுதலாக வந்துள்ள லெஜெண்டர் எஸ்யூவி என ஒட்டுமொத்தமாக விற்பனை எண்ணிக்கை 3,00,000 யூனிட்டுகளை கடந்துள்ளது.