Automobile Tamilan

டொயோட்டா கிளான்ஸா என்ஜின், மைலேஜ் விபரம் சிறப்பு பார்வை

டொயோட்டா கிளான்ஸா கார்

ஜூன் 6 ஆம் தேதி வெளியிடப்படுகின்ற டொயோட்டா நிறுவனத்தின் கிளான்ஸா காரில் இரு விதமான பெட்ரோல் என்ஜின், மைலேஜ் மற்றும் முக்கிய வசதிகள் உட்பட விலை எதிர்பார்ப்புகளை அறிந்து கொள்ளலாம்.

சுசுகி-டொயோட்டா கூட்டணியில் டொயோட்டா விற்பனை செய்ய உள்ள பெலினோ காரின் அடிப்படையிலான கிளான்ஸா காரின் தோற்றம் உட்பட என்ஜின் வசதிகள் போன்றவை பலேனோ போன்றே அமைந்திருக்கின்றது.

டொயோட்டா கிளான்ஸா கார்

பலேனோ கார் இந்தியாவில் மிக அதிகம் விற்பனையாகின்ற ஹேட்ச்பேக் ரக காரின் அடிப்படையில் வெளியாக உள்ள க்ளான்ஸா முன்பதிவு டீலர்கள் மூலம் நடைபெற்று வரும் நிலையில், முன்பாக ஒரே என்ஜின் ஆப்ஷன் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது இரு பெட்ரோல் என்ஜின் ஆப்ஷன் மற்றும் Glanza G, G CVT, V மற்றும் V CVT என 5 வேரியட்டுகளில் வரவுள்ளது.

மாருதியின் பலேனோ காரில் இடம்பெற்றுள்ள ஸ்மார்ட் ஹைபிரிட் மாடலை கிளான்ஸாவும் கொண்டிருக்கும், 90 ஹெச்பி பவர் மற்றும் 113 NM டார்க் புதிய 1.2 லிட்டர் என்ஜின் பெற்ற K12C பிஎஸ் 6 மாசு கட்டுப்பாடு விதிகளுக்கு ஏற்ப தயாரிக்கப்பட்டு இரு லித்தியம் ஐயன் பேட்டரி ஆதரவை கொண்டதாக உடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் G வேரியன்டில் மட்டும் பொருத்தப்பட்டு 5 மேனுவல் கியர்பாக்ஸ் கொண்டதாக மட்டும் கிடைக்கும்.

அடுத்தப்படியாக, க்ளான்ஸாவில் மற்றொரு பெட்ரோல் என்ஜின் 83 hp ஆற்றலை வழங்கும் 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் டார்க் 115 NM மற்றும் இதன் மைலேஜ் லிட்டருக்கு 21.01 கிமீ ஆகும்.

Glanza G MT மைலேஜ் லிட்டருக்கு 23.87 கிலோமீட்டர் G CVT, V CVT வேரியண்ட் மைலேஜ் லிட்டருக்கு 19.56 கிலோமீட்டர் மற்றும் கிளான்ஸா V MT வேரியண்ட் லிட்டருக்கு 21.01 கிலோமீட்டர் ஆகும்.

மாருதியின் பலேனோ காரில் உள்ள வசதிகளை தொடர்ந்து தக்கவைத்துக் கொண்டுள்ள கிளான்ஸாவில் 7 அங்குல இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்துடன் ஆப்பிள் கார் பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ, நேவிகேஷன், வாய்ஸ் கமென்டு, உள்ளிட்ட பாதுகாப்பு வசதிகளுடன் ஏபிஎஸ் உடன் இபிடி , ரியர் பார்க்கிங் சென்சார், டூயல் டோன் அலாய் வீல் , ரீவர்ஸ் கேமரா உள்ளிட்ட வசதிகளை இந்த கார் கொண்டிருக்கும்.

டொயோட்டா கிளான்ஸா காரின் ஆரம்ப விலை ரூ. 8 லட்சம் முதல் தொடங்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

உதவி – ஆட்டோகார் இந்தியா

Exit mobile version