Automobile Tamilan

டொயோட்டா இன்னோவா கிரிஸ்டா, ஃபாரச்சூனர், ஹைலக்ஸ் உற்பத்தி நிறுத்தம்

toyota hilux

டொயோட்டா கிரிலோஷ்கர் இந்தியா நிறுவனத்தின் இன்னோவா கிரிஸ்டா, ஃபார்ச்சூனர் மற்றும் ஹைலக்ஸ் பிக்கப் டிரக்கில் உள்ள டீசல் என்ஜின் hp சோதனை மூலம் சான்றிதழில் முறைகேடுகள் கண்டறியப்பட்டதால் உற்பத்தியை தற்காலிகமாக நிறுத்தியுள்ளது.

டொயோட்டா மோட்டார் கார்ப்பரேஷன் (TMC) அதன் டீசல் என்ஜின்களை தயாரிக்கின்ற டொயோட்டா இண்டஸ்ட்ரீஸ் கார்ப்பரேஷனை (TICO) நியமித்துள்ளது. TICO டொயோட்டாவிடம், சாத்தியமான சான்றிதழ் முறைகேடுகளை ஆராய அமைக்கப்பட்ட ஒரு சிறப்பு புலனாய்வுக் குழு, டொயோட்டா TICO மூலம் வழங்கிய மூன்று டீசல் என்ஜின்களுக்கான குதிரைத்திறன் வெளியீடு தொடர்பான சான்றிதழ் சோதனையின் போது முறைகேடுகள் நடந்ததாகக் குறிப்பிட்டுள்ளது.

இந்த புகார் எழும்பியதும் உடனடியாக டீசல் என்ஜின் தயாரிப்பை நிறுத்தி இது தொடர்பான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதால் தற்காலிகமாக உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது.

டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் வெளியிட்டுள்ள அறிக்கையில், ” இந்த விதிமீறல் எங்கள் வாடிக்கையாளர்களுக்கும் பிற பங்குதாரர்களுக்கும் ஏற்படக்கூடிய ஏதேனும் சிரமத்திற்கும் TKM மன்னிப்பு கேட்டுக்கொள்கிறது.” பாதிக்கப்பட்டவர்களின் சான்றிதழுக்காகப் பயன்படுத்தப்பட்ட தரவை மீண்டும் உறுதிப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் இணைந்து செயல்படுவதாகவும் டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் தெரிவித்துள்ளது.

ஆனால், மேலும், இது பாதிக்கப்பட்ட வாகனங்களின் மாசு உமிழ்வு அல்லது பாதுகாப்பில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது” என்று செய்தித் தொடர்பாளர் உறுதியளித்துள்ளார்.

இந்தியா மட்டுமல்லாமல் சர்வதேச நாடுகளில் இந்த என்ஜின் பயன்பாட்டில் உள்ளது. டொயோட்டா மற்றும் லெக்ஸஸ் பயணிகள் வாகன வரம்பில் மொத்தம் பத்து மாடல்கள் சந்தேகத்துக்குரிய என்ஜின்களுடன் பொருத்தப்பட்டுள்ளன. 2.4-லிட்டர், நான்கு சிலிண்டர் ‘2GD’ டீசல் இன்னோவா கிரிஸ்டா, 2.8 லிட்டர், நான்கு சிலிண்டர் ‘1GD’ ஃபார்ச்சூனர் மற்றும் ஹைலக்ஸ் மற்றும் லெக்ஸஸ் LX500D மற்றும் டொயோட்டா லேண்ட் க்ரூஸர் 300 சக்தியளிக்கும் 3.3-லிட்டர் ‘F33A’ V6 என்ஜின் ஆகும்.

இது தொடர்பாக டொயோட்டா விரிவான அறிக்கையை விரைவில் வெளியிடவும் மீண்டும் உற்பத்தியை துவங்கவும் திட்டமிட்டுள்ளது.

source

Exit mobile version