டொயோட்டா நிறுவனம் முதன்முறையாக BS6 2.0 அடிப்படையில் வெளியிட்டுள்ள முதல் ஃபிளெக்ஸ் ஃப்யூவல் என்ஜின் பெற்ற இன்னோவா ஹைகிராஸ் ஹைபிரிட் கார் E85 (எத்தனால் 85 %) கொண்டு இயங்கும் மாடலாகும்.
இந்தியாவில் விரைவில் எத்தனால் 20 % கலப்பு செய்யப்பட்டு பெட்ரோல் விற்பனை செய்யப்பட உள்ள நிலையில், தற்பொழுது காட்சிப்படுத்தப்பட்டுள்ள E85 மாடல் 15 % பெட்ரோல் மற்றும் 85 % எத்தனால் கலப்பதனால் மாசு உமிழ்வு பெருமளவவு கட்டுக்குள் வருவதுடன், கச்சா எண்ணெய் இறக்குமதி குறைக்கப்படும். எத்தனால் ஆனது கருப்பு சக்கை மற்ற விவசாய கழிவுகளில் இருந்து இந்தியாவிலே தயாரிக்கலாம்.
Toyota innova Hycross Flex Fuel
தற்பொழுது ஆரம்பகட்ட தயாரிப்பு நிலையில் உள்ள இன்னோவா ஹைக்ராஸ் ஃபிளெக்ஸ் ஃப்யூவல் மாடலை ஒன்றிய அமைச்சர்கள் நிதின் கட்கரி மற்றும் ஹர்தீப் சிங் பூரி ஆகியோர் முன்மாதிரியை அறிமுகம் செய்தனர். ஆனால் விற்பனைக்கு வரும் காலக்கெடு பற்றி அறிவிக்கப்படவில்லை.
இன்னோவா ஹைக்ராஸ் ஃப்ளெக்ஸ் காரில் தொடர்ந்து 186 hp பவர் வெளிப்படுத்தும் 2.0-லிட்டர் அட்கின்சன் சைக்கிள் பெட்ரோல் என்ஜின் மின்சார மோட்டார் கொண்டதாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. ஃப்ளெக்ஸ் எரிபொருளை பயன்படுத்தும் வகையில் என்ஜின் பாகங்களை மாற்றியமைத்துள்ளது. குறிப்பாக, வால்வு, வால்வு சீட்டிங், ஸ்பார்க் பிளக், பிஸ்டன் ரிங் டாப் உள்ளிட்ட அமைப்புகளுடன் சிலிண்டர் ஹெட் மூலம் சிறிய மாற்றங்களை தந்து எத்தனால் எரிபொருளுக்கு ஏற்றதாக மேம்படுத்தியுள்ளது.
ஹைபிரிட் இன்னோவா ஹைக்ராஸ் ஃப்ளெக்ஸ் மாடல் 60 சதவீத எலக்ட்ரிக் பவர் (பேட்டரி பேக்கைப் பயன்படுத்தி) மற்றும் அதே நேரத்தில் 40 சதவீதம் எத்தனால் மூலம் இயங்கும் என்ஜினிலிருந்து பவரை பெற்று இயங்கும்.
வாகனத்தின் ஃப்யூவல் வடிகட்டி, ஃப்யூவல் பம்ப் மற்றும் எத்தனால் சென்சார் நிறுவப்பட்ட எரிபொருள் லைன்களிலும் எத்தனாலுக்கு ஏற்ற செயல்பாட்டை வழங்க பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
ஃபிளெக்ஸ் ஃப்யூவல் பெற்ற டொயோட்டா இன்னோவா ஹைக்ராஸ் ஆரம்ப கட்ட தயாரிப்பு நிலையில் உள்ளதால் விற்பனைக்கு வர அடுத்த சில ஆண்டுகள் தேவைப்படும்.