விரைவில்.., டொயோட்டா ரைஸ் காம்பாக்ட் எஸ்யூவி அறிமுகமாகிறது

toyota raize

டொயோட்டா மோட்டார் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் 4 மீட்டருக்கு குறைவான நீளம் பெற்ற டொயோட்டா ரைஸ் (Toyota Raize) காம்பாக்ட் எஸ்யூவி காரின் அறிமுகம் நவம்பர் மாதம் மேற்கொள்ள உள்ள நிலையில் முதன்முறையாக படம் வெளியாகியுள்ளது.

சமீபத்தில் 46வது டோக்கியோ மோட்டார் ஷோவில் டைஹட்சூ ராக்கி என்ற பெயரில் அறிமுகம் செய்யப்பட்ட இந்த காரின் டொயோட்டா பிராண்டு மாடலே ரைஸ் என பெயரிடப்பட்டுள்ளது. டொயோட்டாவின் TNGA பிளாட்பாரம் அல்லது டைஹட்சூ DNGA பிளாட்பாரத்தில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த எஸ்யூவி கார் டொயோட்டாவின் எஸ்யூவிகளில் இடம்பெறுகின்ற தோற்ற பொலிவினை பெற்ற இந்த மாடல் RAV4 எஸ்யூவி தாக்கத்தை கொண்டுள்ளது.

குறிப்பாக செங்குத்தான எல்இடி ரன்னிங் விளக்குகளை பெற்ற ராக்கி காரில் இதற்கு மாற்றாக ரைஸ் காரில் கிடைமட்டமாக வழங்கப்பட்டுள்ளது. இந்த இரு கார்களுக்கு முகப்பு அமைப்பின் மிகப்பெரிய மாற்றம் செய்யப்பட்ட கிரில் எல்இடி ஹெட்லேம்பை கொண்டுள்ளது.  17 அங்குல அலாய் வீல், உயரமான வீல் ஆர்சு, பக்கவாட்டு உட்பட முன் மற்றும் பின்புறத்தில் பாடி கிளாடிங்கை கொண்டுள்ளது.  பின்புறத்தில் எல்இடி டெயில் விளக்குகளை கொண்டுள்ளது.

இன்டிரியர் அமைப்பில் கிரே நிறத்திலான டேஸ்போர்டினை பெற்று அலுமினியம் பிட் கொண்ட ஸ்டீயரிங் மற்றும் ஏசி வென்ட்ஸ், மிதக்கும் வகையிலான 8.0 அங்குல இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் பெற்றுள்ளது.

ரைஸ் எஸ்யூவி மாடலில்  98 ஹெச்பி பவர் மற்றும் 140 என்எம் டார்க் வெளிப்படுத்தும் 1.0 லிட்டர் டர்போ சார்ஜ்டு என்ஜினுடன் சிவிடி கியர்பாக்ஸ் மற்றும் 6 வேக கியர்பாக்ஸூடன் பெற்று ஃபிரென்ட் அல்லது ஆல் வீல் டிரைவ் ஆப்ஷனை பெற வாய்ப்புள்ளது.

நவம்பர் மாதம் டொயோட்டா ரைஸ் அறிமுகம் செய்யப்பட உள்ள நிலையில் இந்திய சந்தையில் விற்பனைக்கு வருவது குறித்து எந்த உறுதியான தகவலும் இல்லை. ஒருவேளை இந்திய சந்தையில் வெளியிடப்பட்டால் ஹூண்டாய் வென்யூ, விட்டாரா பிரெஸ்ஸா, எக்ஸ்யூவி 300 மற்றும் நெக்ஸான் போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமையும்.

Exit mobile version