இந்தியாவில் எலக்ட்ரிக் வாகன சந்தையில் குறிப்பாக நான்கு சக்கர வாகனங்கள் பிரிவில் புதிதாக பல்வேறு மாடல்கள் விற்பனைக்கு வெளியாகி வரும் நிலையில் ஜூன் 2 முதல் அடுத்த மூன்று முதல் நான்கு மாதங்களுக்குள் ஹாரியர்.ev, காரன்ஸ் கிளாவிஸ்.ev, வின்ஃபாஸ்ட் VF7, VF6, மாருதி சுசூகி e விட்டாரா, டெஸ்லா, மஹிந்திரா 3XO EV, சுமார் ஏழுக்கு மேற்பட்ட எலக்ட்ரிக் கார்கள் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகின்றது.
இவை மட்டுமல்ல எம்ஜி செலக்ட் மூலம் சைபர்ஸ்டெர், M9 உள்ளிட்ட பல்வேறு பிரிமீயம் மாடல்கள் டாடா சியரா இவி ஆகியவற்றை எதிர்பார்க்கலாம்.
டாடா ஹாரியர்.ev
ஜூன் 3 ஆம் தேதி வரவுள்ள ஹாரியர்.இவி எலக்ட்ரிக் காரின் ரேஞ்ச் 600கிமீ மேல் எதிர்பார்க்கப்படும் நிலையில் QWD எனப்படுகின்ற ஆல் வீல் டிரைவ் பெற்று பெரிய பேட்டரி ஆப்ஷனுடன் ஆரம்ப விலை ரூ.20 லட்சத்துக்கும் கூடுதலாக துவங்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
கியா காரன்ஸ் கிளாவிஸ்.ev
சமீபத்தில் சந்தைக்கு வந்துள்ள கேரன்ஸ் கிளாவிஸ் அடிப்படையிலான எலக்ட்ரிக் கிளாவிஸ் காரில் க்ரெட்டா எலக்ட்ரிக் மாடலில் உள்ளதை போன்றே 42 kWh பேட்டரி மாடல் 99 kW (135 PS) மற்றும் வெளிப்படுத்துகின்ற நிலையில் முழுமையான சிங்கிள் சார்ஜில் 350-400கிமீ ரேஞ்ச் தரவல்லதாகும். அடுத்து, 51.4 kWh பேட்டரி 126 kW (171 PS) பவர் வெளிப்படுத்துவதுடன் முழுமையான சார்ஜில் 450-500கிமீ வழங்கலாம்.
விற்பனைக்கு ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதம் எதிர்பார்க்கப்படுகின்றது.
வின்ஃபாஸ்ட்
ஜூன் மாத மத்தியில் முன்பதிவு துவங்கப்பட உள்ள VF7, VF6 என இரு எலக்ட்ரிக் கார்களும் டெலிவரி செப்டம்பர் மாதம் மேற்கொள்ளப்பட உள்ள நிலையில், 59.6kWh பேட்டரி பொருத்தப்பட்ட விஎஃப்6 காரில் ஈக்கோ மற்றும் பிளஸ் என இரு வேரியண்டுகளை பெற்று விலை ரூ.18 லட்சத்தில் துவங்கலாம்.
ரூ.30 லட்சத்தில் எதிர்பார்க்கப்படுகின்ற விஎஃப்7 காரில் 75.3kWh பேட்டரி பேக் பொருத்தப்பட்டு AWD வசதியுடன் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகின்ற நிலையில் ஈக்கோ மற்றும் பிளஸ் என இரு வேரியண்டுகள் வழங்கப்படலாம்.
மாருதி சுசூகி e விட்டாரா
இந்தியாவின் முதன்மையான மாருதி சுசூகி நிறுவனத்தின் இ விட்டாரா விற்பனைக்கு செப்டம்பர் 2025ல் ரூ.17 லட்சத்தில் எதிர்பார்க்கப்படுகின்ற நிலையில் 49kWh மற்றும் 61kWh என இருவிதமான பேட்டரி ஆப்ஷனை பெற உள்ளது.
டாப் வேரியண்ட் 61kWh பேட்டரி ஆப்ஷனை பெற்றதாக உள்ள வேரியண்ட் 500கிமீ ரேஞ்ச் வழங்கலாம். குறைந்த விலை 49kWh பேட்டரி ஆப்ஷன் 350 கிமீ வெளிப்படுத்தலாம்.
டெஸ்லா
இந்தியாவில் டெஸ்லா நிறுவனம் முதற்கட்டமாக மாடல் 3 மற்றும் மாடல் Y என இரண்டு கார்களும் விற்பனைக்கு ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதம் சந்தைக்கு வரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. முதற்கட்டமாக முன்னணி மெட்ரோ நகரங்களில் கிடைக்க துவங்கலாம்.
மஹிந்திரா XEV 7e, 3XO EV
மஹிந்திரா நிறுவனத்தின் கூபே ஸ்டைல் பெற்ற எக்ஸ்யூவி 700 அடிப்படையிலான XEV 7e இந்த ஆண்டின் இறுதிக்குள் சந்தைக்கு எதிர்பார்க்கப்படுகின்ற நிலையில் விலை ரூ.17 லட்சத்தில் துவங்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்த மாடலில் 59 kWh மற்றும் 79 kWh என இரு விதமான பேட்டரி பேக் ஆப்ஷனை பெறக்கூடும். கூடுதலாக தற்பொழுது விற்பனையில் உள்ள 3XO அடிப்படையிலான எலக்ட்ரிக் காரும் வரக்கூடும்.
MG சைபர்ஸ்டெர், M9
எம்ஜி நிறுவனத்தின் பிரீமியம் டீலர்கள் எம்ஜி செலக்ட் மூலம் விற்பனை செய்யப்பட உள்ள சைபர்ஸ்டெர் எலக்ட்ரிக் ஸ்போர்ட்ஸ் கார், ஆடம்பர வசதிகளை பெற்ற பிரீமியம் எம்பிவி M9 ஆகியவற்றுக்கு ஏற்கனவே முன்பதிவு துவங்கப்பட்டுள்ளதால், விரைவில் அறிவிக்கப்பட்டு டெலிவரி துவங்கப்பட உள்ளது.