• கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result

புதிய அல்கசார், கிரெட்டா EV அறிமுகத்துக்கு தயாரான ஹூண்டாய்

by நிவின் கார்த்தி
31 May 2024, 11:54 am
in Car News
0
ShareTweetSend

ஹூண்டாய் க்ரெட்டா எலக்ட்ரிக்

ஹூண்டாய் இந்தியாவில் பிரசத்தி பெற்ற மாடலாக விற்பனை செய்து வருகின்ற கிரெட்டாவின் அடிப்படையில் 7 மற்றும் 6 இருக்கை பெற்ற அல்கசார் எஸ்யூவி உட்பட க்ரெட்டா எலக்ட்ரிக் மாடலும் விற்பனைக்கு நடப்பு 2024 ஆம் ஆண்டில் வெளியிடப்பட உள்ளது.

கிரெட்டா மற்றும் கிரெட்டா என்-லைன் இரு மாடல்களை தொடர்ந்து வெளியிட்டு நடுத்தர எஸ்யூவி சந்தையில் தனது பங்களிப்பை அதிகரித்துள்ள இந்நிறுவனத்தின் அடுத்த மாடல் கிரெட்டா அடிப்படையிலான எலக்ட்ரிக் எஸ்யூவி மீதான எதிர்பார்ப்பு கணிசமாக உயர்ந்துள்ளது.

2024 Hyundai Alcazar

அல்கசார் தற்பொழுது விற்பனை செய்யப்படுகின்ற கிரெட்டாவில் இருந்து சிறிய அளவிலான டிசைன் மாறுபாட்டை முன்புற கிரில், பம்பர் மற்றும் புதிய டிசைனில் அலாய் வீல் மற்றும் பின்புறத்தில் புதிய பம்பர் பெற்றிருக்கும். இண்டிரியரில் கிரெட்டாவை போலவே இரட்டை ஸ்கீரின் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் மற்றும் டிஜிட்டல் கிளஸ்ட்டர் பெற்றிருக்கும்.

என்ஜின் பவர் மற்றும் கியர்பாக்ஸ் ஆப்ஷனில் எந்த மாற்றமும் இருக்காது. 116 hp பவர் மற்றும் 250 Nm டார்க் வழங்கும் 1.5 லிட்டர் டீசல் என்ஜினில் 6 வேக ஆட்டோமேட்டிக் மற்றும் 6 வேக மேனுவல் கியர்பாக்ஸ் கிடைக்க உள்ளது.

புதிய 1.5 லிட்டர் GDI டர்போ பெட்ரோல் என்ஜின் அதிகபட்சமாக 160 bhp மற்றும் 253 Nm டார்க் வெளிப்படுத்தும். இதில் 6 வேக MT மற்றும் 7 வேக DCT ஆட்டோ கியர்பாக்ஸ் இடம்பெற்றிருக்கும். பாதுகாப்பு சார்ந்த வசதிகளில் அடிப்படையாகவே 6 ஏர்பேக்குகளை பெற உள்ள இந்த காரில் ADAS சார்ந்த மேம்பாடுகளை கொண்டிருக்கும்.

செப்டம்பர் மாதம் விற்பனைக்கு வரவுள்ள 2024 ஹூண்டாய் அல்கசார் விலை ரூ.17 லட்சத்துக்குள் அறிமுகப்படுத்தலாம்.

New Hyundai Creta EV

சமீபத்தில் எக்ஸைட் நிறுவனத்துடன் பேட்டரி பெறுவதற்கான ஒப்பந்தத்தை ஹூண்டாய் மற்றும் கியா மேற்கொண்டுள்ளன். ஹூண்டாய் கிரெட்டா எலக்ட்ரிக் காருக்கான பேட்டரி ஆனது உள்நாட்டில் தயாரிக்கப்பட உள்ளது.

2024 ஆம் ஆண்டின் இறுதி அல்லது 2025 ஆம் ஆண்டின் ஜனவரி மாதம் விற்பனைக்கு எதிர்பாக்கப்படுகின்ற கிரெட்டா இவி காரில் உள்ள பேட்டரி 48kwh மற்றும் 65kwh என இரு விதமான பேட்டரி ஆப்ஷன் பெற்று 400 கிமீ முதல் 550 கிமீ வரை ரேஞ்ச் வெளிப்படுத்தலாம்.

ரூ.20 லட்சத்துக்கும் குறைந்த விலையில் வரவுள்ள கிரெட்டா இவி காருக்கு சவால் விடுக்கும் வகையில் மாருதி eVX, டாடா கர்வ் EV, எம்ஜி ZS EV, மற்றும் மஹிந்திரா XUV-e8 போன்ற மாடல்களும் வரவுள்ளது.

Tags: HyundaiHyundai AlcazarHyundai Creta EV
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

ரூ. 7.40 லட்சம் ஆரம்ப விலையில் 2026 மாருதி சுசூகி பிரெஸ்ஸா விற்பனைக்கு அறிமுகம்

கியா சிரோஸ் EV ஆரம்ப விலை ரூ.13.49 லட்சம் மட்டுமே.!

2026 மாருதி சுசூகி பிரெஸ்ஸா காரின் விரிவான BNCAP ஸ்கோர் கார்டு!

526 கி.மீ ரேஞ்சுடன் கியா சிரோஸ் EV காரின் முன்பதிவு தொடங்கியது

ஜூலை 24ல் 2026 பிரெஸ்ஸாவை வெளியிடும் மாருதி சுசூகி

அப்கிரேட் ஸ்டைலுக்கு புதிய மாருதி சுசூகி ஈகோ ஸ்டார் எடிஷன் அறிமுகம்.!

2027-க்குள் ஹூண்டாயின் இரண்டு புதிய அதிரடி எஸ்யூவிகள்.!

10 லட்சத்திற்கும் குறைவான விலையில் சன்ரூஃப் உள்ள டாடா நெக்ஸான் அறிமுகம்

மீண்டும் வந்த மஹிந்திரா BE 6 பேட்மேன் எடிஷன் மார்ச் 10-ல் புக்கிங் தொடக்கம்!

ரெனால்ட்டின் ‘மினி டஸ்ட்டர்’ 2027ல் விற்பனைக்கு வருகின்றது.!

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan

Exit mobile version