இந்திய சந்தையில் நிசான் நிறுவனம் தற்பொழுது மேக்னைட் என்ற ஒற்றை மாடலை மட்டுமே உற்பத்தி செய்து விற்பனை செய்து வரும் நிலையில், அடுத்த 18-24 மாதங்களுக்குள் மூன்று கார்களை இந்திய சந்தையில் வெளியிட திட்டமிட்டுள்ளது.
முற்கட்டமாக வரவுள்ள மாடல் ரெனால்டின் ட்ரைபர் அடிப்படையிலான எம்பிவி, அடுத்து டஸ்ட்டர் அடிப்படையிலான நிசானின் சி-பிரிவு எஸ்யூவி இறுதியாக 7 இருக்கை பெற்ற பிக்ஸ்டெரை தழுவியதாக இருக்கும் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
7 seater Nissan B-Segment MPV
தற்பொழுது சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வரும் குறைந்த விலை ரெனால்ட் ட்ரைபர் எம்பிவி மாடலின் அடிப்படையிலான மாறுபட்ட டிசைன் மற்றும் வசதிகளுடன் 1.0 லிட்டர் பெட்ரோல் மற்றும் கூடுதலாக டர்போ பெட்ரோல் ஆப்ஷனை எதிர்பார்க்கப்படுகின்ற 7 இருக்கை காரில் பட்ஜெட் விலையில் அடிப்படையாக 6 ஏர்பேக்குகள், உறுதியான பாதுகாப்பினை வெளிப்படுத்தும் கட்டுமானத்துடன் வரக்கூடும் என எதி்பார்க்கப்படுகின்றது.
7 லட்சத்துக்குள் வரவுள்ள நிசானின் எம்பிவி பெயர் பற்றி தற்பொழுது எந்த தகவலும் இல்லாத நிலையில் விற்பனைக்கு 2026 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் (ஜனவரி-மார்ச்) கிடைக்கலாம்.
Nissan C-Segment SUV
க்ரெட்டா, விக்டோரிஸ் உட்பட எலிவேட், ஆஸ்டர் செல்டோஸ் என பல்வேறு மாடல்களை எதிரகொள்ள உள்ள பிரசத்தி பெற்ற டஸ்ட்டர் அடிப்படையிலான சி-பிரிவு எஸ்யூவி முதற்கட்டமாக பெட்ரோல், பெட்ரோல்-ஹைபிரிட் என இரு ஆப்ஷனுடன் கூடுதலாக எல்பிஜி ஆப்ஷனிலும் வரும் வாய்ப்புகள் உள்ளது. இன்டீரியரில் மூன்று ஸ்கீரின் செட்டப் கொண்டதாக இருக்கலாம்.
முன்பாக இந்த மாடலை டெர்ரானோ என இந்நிறுவனம் விற்பனை செய்து வந்த நிலையில் தற்பொழுது புதிய பெயருடன் விலை ரூ.10 முதல் 11 லட்சத்துக்குள் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகின்ற நிலையில் விற்பனைக்கு 2026 ஜூன் அல்லது ஜூலை மாதங்களில் கிடைக்கலாம்.
Nissan C-Segment 7 seater SUV
என்ஜின் ஆப்ஷனில் 5 இருக்கை மாடலை பின்பற்றி வடிவமைக்கப்பட உள்ள 7 இருக்கை சி-பிரிவு எஸ்யூவி ஏற்கனவே உள்ள ரெனால்டின் பிக்ஸ்டெரை தழுவியதாக இந்திய சந்தைக்கு ஏற்ற வகையிலான மாறுதல்களை பெற்று இன்டீரியரில் மூன்று ஸ்கீரின் செட்டப் கொண்டிருப்பதுடன் ஆல் வீல் டிரைவ் ஆப்ஷனையும் பெறக்கூடும்.
இந்த 7 இருக்கை மாடல் விற்பனைக்கு 2026 ஆம் ஆண்டின் இறுதி அல்லது 2027 ஆம் ஆண்டின் துவக்க மாதங்களில் சந்தையில் கிடைக்கலாம்.