சிறந்த பெர்ஃபாமென்ஸ் உடன் பல்வேறு ஸ்டைலிங் அம்சங்களை கொண்டுள்ள ஃபோக்ஸ்வேகன் கோல்ஃப் GTi Mk 8.5 விலை ரூ.52.99 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) நிர்ணயம் செய்யப்பட்டு விற்பனைக்கு துவங்கியுள்ளது.
ஏற்கனவே, முதற்கட்டமாக துவங்கப்பட்ட முன்பதிவு 150 யூனிட்டுகளுக்கான பதிவு நிறைவடைந்துள்ளது. இனி அடுத்தகட்ட முன்பதிவு மேலும் 100 யூனிட்டுகளுக்கு விரைவில் துவங்கப்படலாம்.
கோல்ஃப் GTI காரில் உள்ள 265hp பவர் மற்றும் 370Nm டார்க் வெளிப்படுத்தும் 2.0 லிட்டர் TSI பெட்ரோல் பொருத்தப்பட்டு 7 வேக டூயல் கிளட்ச் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் பெற்றுள்ளது. இந்த மாடலின் அதிகபட்ச வேகம் மணிக்கு 250 கிமீ ஆக கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
இன்டீரியரில் 15-இன்ச் சென்ட்ரல் டச்ஸ்கிரீன் மற்றும் 10.3-இன்ச் ஆல்-டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டரை பெற்று GTi ஸ்டீயரிங் வீல் மற்றும் GTi பிராண்டிங் கொண்ட ஸ்போர்ட்ஸ் இருக்கைகளை கொண்டிருக்கும்.
இரட்டை புகைப்போக்கி, 18 அங்குல அலாய் வீல் பெற்று கிரெனடில்லா பிளாக் மெட்டாலிக், ஓரிக்ஸ் ஒயிட் பிரீமியம், மூன்ஸ்டோன் கிரே பிளாக் மற்றும் கிங்ஸ் ரெட் பிரீமியம் என நான்கு நிறங்களுடன் கிடைக்கின்றது.
கோல்ஃப் ஜிடிஐ காரின் பாதுகாப்பு அம்சங்களை பொறுத்தவரை, ஏழு ஏர்பேக்குகள், ரியர்-வியூ கேமரா, டயர் பிரஷர் மானிட்டர், ISOFIX ஆங்கர் மற்றும் ஆட்டோ எமர்ஜென்சி பிரேக்கிங், லேன்-சேஞ்ச் அசிஸ்ட் மற்றும் ரியர் டிராஃபிக் அலர்ட் போன்ற அம்சங்களுடன் கூடிய லெவல் 2 ADAS ஆகியவற்றை பெற்றுள்ளது.