வோக்ஸ்வேகன் போலோ, ஏமியோ, வென்ட்டோ ஸ்போர்ட் எடிஷன் விற்பனைக்கு வந்தது

இந்தியாவில் வோக்ஸ்வேகன் நிறுவனம், ஸ்போர்ட் எடிஷன் என்ற பெயரில் போலோ , ஏமியோ மற்றும் வென்ட்டோ ஆகிய மூன்று மாடல்களில் சிறப்பு பதிப்பு விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

வோக்ஸ்வேகன் ஸ்போர்ட் எடிஷன்

கூடுதலான விலை மாற்றம் செய்யப்படாமல், கூடுதல் வசதிகளை பெற்றதாக ஸ்போர்ட் எடிஷன் என்ற பெயரில் ஏமியோ, போலோ மற்றும் வென்டோ கார்களில் மேற்கூறை கருப்பு நிற பூச்சூ, கருமை நிறத்திலான ஸ்பாய்லர் , சைட் பேணல்கள் ஃபாயில், பின்புறம் பார்க்கும் கண்ணாடிகளிலும் பெற்றுள்ளது. இன்டிரியர் அமைப்பில் எவ்விதமான மாற்றங்களும் வழங்கப்படவில்லை.

போலோ, ஏமியோ கார்களில் முந்தைய 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சினுக்கு மாற்றாக கூடுதலான மைலேஜ் தரவல்ல 1.0 லிட்டர் MPI பெட்ரோல் எஞ்சின் 75 ஹெச்பி ஆற்றல் மற்றும் 95 என்எம் இழுவைத் திறன் கொண்ட எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. வென்ட்டோ மாடலில் 1.6 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.2லிட்டர் பெட்ரோல் என இரண்டிலும் கிடைக்கின்றது. மூன்று மாடல்களில் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது.

ஃபோக்ஸ்வேகன் போலோ ஆரம்ப விலை ரூ. 5.41 லட்சம், ஃபோக்ஸ்வேகன் ஏமியோ ஆரம்ப விலை ரூ. 5.50 லட்சம் மற்றும் ஃபோக்ஸ்வேகன் வென்ட்டோ ஆரம்ப விலை ரூ. 10.70 லட்சமாகும்.

Exit mobile version