குறிப்பாக பிரெஞ்ச் நாட்டின் பியூஜியோட் சிட்ரோவன் நிறுவனம் அடுத்த ஆண்டு இந்தியாவில் மிட் சைஸ் செடான் காரை விற்பனைக்கு கொண்டு வரும் என எதிர்பார்த்த நிலையில் குஜாரத்தில் அமைக்கவிருந்த ஆலையை கைவிட்டுள்ளது. அதாவது அடுத்த 10 ஆண்டுகளுக்கு தள்ளி வைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. பொருளாதர பாதிப்பில் உள்ளதால் இந்த முடிவு எடுத்துள்ளது.
ஹீரோ நிறுவனத்துடன் இனைந்து களமிறங்க திட்டமிட்ட மலேசியாவின் புரோட்டான் நிறுவனமும் தற்காலிகமாக கைவிட்டுள்ளது. இதற்க்கு முக்கிய காரணம் பொருளாதர மந்தநிலையே ஆகும்.
சீனாவின் கீலி மற்றும் செர்ரி நிறுவனங்கள் ஆட்டோமேட்டிக் பெட்ரோல் கார் தயாரிப்பில் சீனாவில் சிறந்த விளங்குகின்றது. ஆனால் இந்தியாவில் மெனுவல் டீசல் கார்களுக்கே அதிகமான வரவேற்ப்பு உள்ளதால் தள்ளிவைத்துள்ளது.
ஹூன்டாய் நிறுவனத்தின் துனை நிறுவனமான கியா தள்ளிவைத்துள்ளது.
சில நிறுவனங்கள் இந்தியாவிற்க்கு பதிலாக பிரேசில், அர்ஜென்டீனா, தென் அமெரிக்கா, ரஷ்யா, சீனா போன்ற நாடுகளில் தங்கள் நிறுவனத்தை தொடங்குகின்றன.