தற்பொழுது திருவொற்றியூர் ஆலையின் மூலமே விற்பனை செய்து வருகின்றது. அதிகப்படியான முன்பதிவுகள் காத்திருக்க வேண்டிய நிலையில் உள்ளதால் உற்பத்தியை அதிகரிக்கின்றது.
ஆண்டிற்க்கு 1,50,000 பைக்களை உற்பத்தி செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் பைக்கள் விரைவில் கிடைக்கும்.
சித்தார்த் லால் MD & CEO (Eicher Motors Ltd) கூறுகையில்..
இன்னும் சில மாதங்களில் ஒரகடம் ஆலையில் உற்பத்தி தொடங்கும். இந்த ஆலையிலும் உற்பத்தி தொடங்கினால் வருடத்திற்க்கு 1,50,000 பைக்கள் தயாரிக்க முடியும்.2014 ஆம் ஆண்டில் முழுமையாக எட்டும்.
உற்பத்தியை அதிகரிப்பதனால் முன்பதிவு செய்து காத்திருப்போர் பட்டியல் குறையும். தற்பொழுது முன்பதிவு செய்தவர்கள் 6 முதல் 8 மாதம் வரை காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
கடந்த 2 ஆண்டுகளில் 50 சதவீதம் ராயல் என்பீல்டு வளர்ச்சி அடைந்துள்ளது.