Automobile Tamilan
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp
No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp
No Result
View All Result
Automobile Tamilan
No Result
View All Result

ஏற்றுமதியில் டாப் 10 கார்கள் – 2015-2016

by automobiletamilan
மே 9, 2016
in வணிகம்

இந்திய சந்தையில் உற்பத்தி செய்யப்பட்டு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் கார்களில் 2015-16 நிதி ஆண்டில் முதல் 10 இடங்களை பிடித்த கார்களை பற்றி இந்த செய்தி தொகுப்பில் தெரிந்துகொள்ளலாம். முதலிடத்தில் பிரசத்தி பெற்ற காம்பேக்ட் ரக எஸ்யூவி ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் உள்ளது. 2014-15யில் முதலிடம் வகித்த நிசான் மைக்ரா இரண்டமிடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.

நாட்டின் இரண்டாவது பெரிய கார் உற்பத்தியாளரான ஹூண்டாய் நிறுவனத்தின் 4 கார்கள் ஏற்றுமதி சந்தையை ஆக்கிரமித்துள்ளது. நிசான் நிறுவனத்தின் இரு கார்கள் , மாருதி , ஃபோக்ஸ்வேகன் , செவர்லே , ஃபோர்டு நிறுவனங்கள் தலா ஒரு காரினை பெற்றுள்ளது. மாருதி , ஃபோக்ஸ்வேகன் , செவர்லே நிறுவனங்களின் கார்களை தவிர்த்த மற்ற 7 கார்களும் சென்னை துறைமுகம் வழியாக ஏற்றுமதி செய்யப்படுகின்றது.

  1. ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட்

முதலிடத்தில் உள்ள ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவி கார் 83,325 கார்களை ஏற்றுமதி செய்துள்ளது. இந்திய மட்டுமல்லாமல் பல வெளிநாடுகளில் பிரசத்தி பெற்ற காராக ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவி விளங்குகின்றது.

Ford-EcoSport-facelift

2. நிசான் மைக்ரா

கடந்த 2014-2015 நிதி ஆண்டில் முன்னனி வகித்த நிசான் மைக்ரா தற்பொழுது ஒருபடி இறங்கி இரண்டாமிடத்தில் உள்ளது. 75,456 மைக்ரா கார்கள்  வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.

nissan-micra

3.  ஃபோக்ஸ்வேகன் வென்ட்டோ

63,157 வென்ட்டோ கார்கள் இந்தியாவிலிருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. இந்திய சந்தையில் பெரிதாக வாடிக்கையாளர்களினை அடையாவிட்டாலும் வெளிநாடுகள்ளில் நல்ல வரவேற்பினை பெற்ற மாடலாக விளங்குகின்றது.

ஃபோக்ஸ்வேகன் வென்ட்டோ

4. மாருதி ஆல்ட்டோ

இந்திய சந்தையின் முதன்மையான ஆல்ட்டோ கார் வெளிநாடுகளுக்கான ஏற்றுமதி பட்டியலில் 54.646 ஆல்ட்டோ கார்களை ஏற்றுமதி செய்து மாருதி சுஸூகி நிறுவனம் 4வது இடத்தினை வகிக்கின்றது.

ஆல்ட்டோ

5. ஹூண்டாய் கிராண்ட் ஐ10

இந்திய சந்தையில் சிறப்பான வரவேற்பினை பெற்ற மாடலாக வலம் வரும் கிராண்ட் ஐ10  44,672 கார்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. இளம் வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்புடன் சிறப்பான விற்பனை பதிவு செய்து வருகின்றது.

ஹூண்டாய் கிராண்ட் ஐ10

6. செவ்ரலே பீட்

இந்திய சந்தையில் பெரிதான விற்பனை எண்ணிக்கை பதிவு செய்யாவிட்டாலும் 37082 பீட் கார்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு டாப் 10 கார்கள் வரிசையில் 6ஆம் இடத்தினை பெற்றுள்ளது.

Chevrolet Beat Exteriors
Chevrolet Beat Exteriors

7. நிசான் சன்னி

இந்திய சந்தையில் பெரிதாக சோபிக்காத சன்னி கார் வெளிநாடு ஏற்றுமதியில் 31027 கார்கள் கடந்த 2015-2016 நிதி ஆண்டில் ஏற்றுமதி ஆகியுள்ளது.

nissan-sunny

 

8. ஹூண்டாய் எக்ஸென்ட்

காம்பேக்ட் ரக செடான் பிரிவில் நல்ல வரவேற்பினை பெற்ற மாடலாக விளங்கும் எக்ஸென்ட் கார் கடந்த நிதி ஆண்டில் 29,540 கார்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. 2014-2015 நிதி ஆண்டினை காட்டிலும் கடந்த நிதி ஆண்டில் 48 % கூடுதல் வளர்ச்சி அடைந்துள்ளது.

xcent

9. ஹூண்டாய் ஐ10

கிராண்ட் ஐ10 வருகையால் வரவேற்பினை இழந்து வரும் ஐ10 இந்திய சந்தையில் சீரான விற்பனை வளர்ச்சியை பதிவு செய்து வருகின்றது. 21,133 கார்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. கடந்த சில வருடங்களாக ஏற்றுமதியில் வீழ்ச்சியை நோக்கி பயனித்து வருகின்றது.

hyundai i10

10. ஹூண்டாய் க்ரெட்டா

குறைந்த காலத்தில் மிக சிறப்பான வெற்றியை பெற்ற ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவி இந்திய சந்தை மட்டுமல்லாமல் பல வெளிநாடுகளிலும் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது. 19442 க்ரெட்டா கார்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி ஆகியுள்ளது.

Hyundai-2BCreta-2Bsuv

 

 

Tags: கார்
Previous Post

டிவிஎஸ்-யை வீழ்த்திய பஜாஜ் 3வது இடத்தில்

Next Post

எக்ஸ்யூவி500 W6 வேரியண்டில் ஆட்டோமேட்டிக் அறிமுகம்

Next Post

எக்ஸ்யூவி500 W6 வேரியண்டில் ஆட்டோமேட்டிக் அறிமுகம்

Automobile news in Tamil
  • auto
  • auto news
  • Sample Page

© 2023 Automobile Tamilan

No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp

© 2023 Automobile Tamilan

Go to mobile version