ஹூண்டாய் நிறுவனத்தின் அங்கமான தென்கொரியா நாட்டின் கியா மோட்டார்ஸ் தொழிற்சாலை அமைப்பதற்கு 400 ஏக்கர் நிலத்தை வழங்க திட்டமிட்டுள்ளதாக தமிழ்நாடு தொழில்துறை அமைச்சர் திரு எம்.சி. சம்பத் தெரிவித்துள்ளார்.
2018 ஆம் ஆண்டில் இந்தியாவில் உற்பத்தி தொடங்க கியா நிறுவனம் திட்டமிட்டுள்ள நிலை தமிழ்நாடு , ஆந்திரா பிரதேசம் , மஹாராஷ்டிராமற்றும் குஜராத் ஆகிய மாநிலங்களை தேர்வு செய்திருந்த கியா மோட்டார்ஸ் தாய் நிறுவனமான ஹூண்டாய் நிறுவனத்துக்கு அருகிலே ஆலையை அமைக்க திட்டமிட்டிருந்தது.
முதலில் ஆந்திரா மாநிலத்தில் அமைவதற்கே வாய்ப்புகள் அதிகமாக இருந்த நிலையில் தமிழகத்தில் நடந்த பேச்சுவார்த்தையில் 400 ஏக்கர் நிலங்களை கியா மோட்டார்ஸ் கேட்டிருந்த நிலையில் 390 ஏக்கர் நிலத்தை வழங்குவதாக தமிழக தொழில்துறை அமைச்சர் திரு. சம்பத் தெரிவித்துள்ளதால் கியா நிறுவனம் சென்னையில் அமைவதற்க்கு வாய்ப்புகள் அதிகரித்துள்ளது.
தமழகத்தில் கியா திட்டமிட்டுள்ள ஆலையின் வாயிலாக 2019 ஆம் ஆண்டு முதல் 3,00,000 லட்சம் கார்களை ஆண்டுக்கு உற்பத்தி செய்ய திட்டமிட்டுள்ளது. ஹூண்டாய் நிறுவனத்தின் சில மாடல்களை தனது கியா பிரிவின் தளத்தில் மாறுபட்ட பெயரில் விற்பனை செய்து வந்தாலும் சில பிரத்யேக மாடல்களை கியா விற்பனை செய்து வருகின்றது.
மேலும் படிங்க : இந்தியாவின் முதல் எலக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் டார்க் T6X விரைவில்