Automobile Tamilan
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp
No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp
No Result
View All Result
Automobile Tamilan
No Result
View All Result

கேயூவி100 எஸ்யூவி வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி

by automobiletamilan
மே 9, 2016
in வணிகம்

மஹிந்திரா கேயூவி100 மினி எஸ்யூவி கார் இந்திய மட்டுமல்லாமல் வெளிநாடுகளிலும் விற்பனை செய்ய மஹிந்திரா நிறுவனம் திட்டமிட்டிருந்தது. அதன்படி தற்பொழுது 400 கேயூவி100 எஸ்யூவி கார்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.

mahindra_kuv100

இலங்கை , நேபால் மற்றும் தென்ஆப்பரிக்கா போன்ற நாடுகளை கேயூவி100 ஏற்றுமதிக்கான முக்கிய சந்தைகளாக தீர்மானித்துள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் 220 கார்களை பம்பாய் துறைமுகம் வழியாக தென் ஆப்பரிக்கா நாட்டுக்கு ஏற்றுமதி செய்துள்ளது. இது தவிர நேபால் மற்றும் இலங்கைக்கும் ஏற்றுமதி செய்துள்ளது.

ஜனவரி மாதம் விற்பனைக்கு வந்த கேயூவி100 கார் இதுவரை 37,000 முன்பதிவுகளை கடந்து 14,210 கார்கள் டெலிவரி கொடுக்கப்பட்டுள்ளன. மஹிந்திரா நிறுவனத்தின் ஏப்ரல் மாத விற்பனையில் பொலிரோ காருக்கு அடுத்தப்படியாக கேயூவி100 முன்னேறியுள்ளது.

பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின் ஆப்ஷனுடன் வந்த மஹிந்திரா கேயூவி100 காரில் 82 bhp @ 5500 ஆர்பிஎம் யில் வழங்கும் 1198cc எம் ஃபால்கன் G80 பெட்ரோல் என்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் டார்க் 115 Nm 3500 முதல் 3600 ஆர்பிஎம் ஆகும். இதில் 5 வேக கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது.

77 bhp @ 3750 ஆர்பிஎம் யில் வழங்கும் 1198cc எம் ஃபால்கன் D75 டீசல் என்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் டார்க் 190 Nm 1750 முதல் 2250 ஆர்பிஎம் ஆகும். இதில் 5 வேக கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது. டீசல் KUV100  எஸ்யூவி காரில் பவர் மற்றும் இக்கோ மோட் உள்ளது.

மேலும் படிங்க ; மஹிந்திரா கேயூவி100 எஸ்யூவி கார் வாங்கலாமா

காம்பேக்ட் ரக ஹேட்ச்பேக் கார்களுக்கு போட்டியாக அமைந்துள்ள கேயூவி100 எஸ்யூவி இளம் தலைமுறை வாடிக்கையாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

[envira-gallery id=”5460″]

Tags: KUV100Mahindraகேயூவி100
Previous Post

ஸ்கோடா எஸ்யூவி பெயர் : கோடியக்

Next Post

டிவிஎஸ்-யை வீழ்த்திய பஜாஜ் 3வது இடத்தில்

Next Post

டிவிஎஸ்-யை வீழ்த்திய பஜாஜ் 3வது இடத்தில்

Automobile news in Tamil
  • auto
  • auto news
  • Sample Page

© 2023 Automobile Tamilan

No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp

© 2023 Automobile Tamilan

Go to mobile version