சென்னையில் மேன் இந்தியா நிறுவனத்தின் விஜய் எர்த்மூவிங் எக்யூப்மென்ட் சார்பில் சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் திறக்கப்பட்டுள்ளது. மேன் இந்தியா நிறுவனத்தின் 64வது டீலராக தொடங்கப்பட்டுள்ளது.
மேன் டிரக் டீலர்
இந்தவருடத்தின் 4 வது டீலாரக திறக்கப்பட்டுள்ள விஜய் எர்த்மூவிங் எக்யூப்மென்ட் டீலருக்கு முன்பாக சோலப்பூர், புனே மற்றும் விஜயவாடா போன்ற பகுதிகளில் திறக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் மிக சிறப்பான வரளச்சி பெற்று வருகின்ற மேன் டிரக நிறுவனத்தின் பிதாம்பூர் ஆலையில் முதன்முறையாக 25000 வாகனங்கள் உற்பத்தியை எட்டியுள்ளது. மேலும் கடந்த டிசம்பர் 2016-ல் CLA எவோ வரிசையில் 16 டன் முதல் 49 டன் வரையிலான பிரிவுகளில் டிரக்குகளை அறிமுகம் செய்திருந்தது.
தென்னிந்தாயிவின் 24வது டீலராக தொடங்கப்பட்டுள்ள விஜய் எர்த்மூவிங் எக்யூப்மென்ட் விற்பனை மற்றும் சர்வீஸ் பிரிவுகளுடன் மொத்தம் 13,000 சதுரஅடி பரப்பளவில் அமைந்துள்ளது.இதில் 3 சர்வீஸ் பே உள்பட கஸ்டமர் மற்றும் டிரைவர் லான்ஞ் போன்றவை இடம்பெற்றுள்ளது.