இந்தியாவிலே ஜாகுவார் XJ சொகுசு கார் ஒருங்கினைக்கப்படுவதால் கடந்த 12 மாதங்களில் 300 சதவீத வளர்ச்சியை எட்டியுள்ளது. கடந்த 2014ம் ஜூன் மாதம் முதல் இந்தியாவிலே அசெம்பிள் செய்யப்படுகின்றது.
மிக நேர்த்தியான வடிவம் , நவீன சொகுசு வசதிகள் , பிராண்ட் மதிப்பு என பல பெருமைகளை கொண்ட ஜாகுவார் காரின் விற்பனை அதிகரிக்க காரணம் உள்நாட்டிலே உற்பத்தி செய்யப்படுவதனால் விலை குறைந்துள்ளது.
இதுபற்றி ஜாகுவார் லேண்ட்ரோவர் இந்திய பிரிவு தலைவர் திரு. ரோஹித் சூரி கூறுகையில் , மிக நேர்த்தியான அழகான தோற்றத்தினை கொண்டுள்ள இந்த காரின் சிறப்பபான செயல்திறன் மற்றும் கையாளும் தன்மை போன்றவற்றால் நல்ல விற்பனை வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.
இந்தியாவில் நல்ல வளர்ச்சியை பெற்றுள்ள ஜாகுவார் சீனா சந்தையில் பெரும் நெருக்கடியை சந்தித்து உள்ளதால் மேல்மட்ட அதிகாரிகள் மாற்றப்பட உள்ளனர்.
Jaguar India Registerd 300% growth in last 12 months