மாருதி சுஸூகி
இந்தியாவின் முதன்மையான விற்பனையாளராக விளங்கும் மாருதி கடந்த சில மாதங்களாகவே சரிவை கண்டுள்ளது.ரூ.3000(ஆம்னி) முதல் ரூ.70,000 (எக்ஸ்4 டீசல்)வரை சலுகைகள் வழங்கியுள்ளது.
ஹூண்டாய்
ஹூண்டாய் மோட்டார்ஸ் சரிவை சந்தித்துள்ளது. ரூ.19,262 (இயான்)முதல் ரூ.65,327 (சொனாட்டா) வரை சலுகைகள் வழங்கியுள்ளது.
டாடா
டாடா மோட்டார்ஸ் மற்ற நிறுவனங்களை விட மிக பெரும் சரிவை சந்தித்துள்ளது. ரூ.30000 (இண்டிகா இவி2)முதல் ரூ.1,00,000(ஆர்யா) வரை சலுகைகள் வழங்கியுள்ளது.
மஹிந்திரா
மஹிந்திரா வரி உயர்வினால் பெரும் சரிவை சந்தித்துள்ளது. ரூ.5000 (பொலிரோ)முதல் ரூ.58,888(குவான்ட்டோ) வரை சலுகைகள் வழங்கியுள்ளது.
செவ்ரோலெட்
செவர்லே ரூ.5,000(செயில்)முதல் ரூ.35,000 (டவேரா) வரை சலுகைகள் வழங்கியுள்ளது.
டொயோட்டா
டொயோட்டா நிறுவனத்தின் பிரபலமான இன்னோவா காரின் விற்பனை சரிந்துள்ளது. ரூ.17,500(எடியாஸ் மற்றும் லீவா) முதல் ரூ.35,000 (இன்னோவா மற்றும் ஆல்டிஸ்) வரை சலுகைகள் வழங்கியுள்ளது.
ஹோண்டா
ஹோண்டா அமேஸ் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது. ஆனால் மற்ற கார்களின் விற்பனை சரிவடைந்துள்ளது.ரூ.23,089(பிரியோ)முதல் ரூ.1,40,000 (அக்கார்ட்) வரை சலுகைகள் வழங்கியுள்ளது.
ஃபோர்டு
ஃபோர்டு ரூ.27,333(ஃபிகோ)முதல் ரூ.63,599 (என்டோவர்) வரை சலுகைகள் வழங்கியுள்ளது.
ஃபோக்ஸ்வேகன்
ஃபோக்ஸ்வேகன் நிறுவனம்தான் மிக பெரிய சலுகையை தந்துள்ளது. ரூ.20,000(போலோ)முதல் ரூ.2,50,000 (பஸாத்) வரை சலுகைகள் வழங்கியுள்ளது.
ஸ்கோடா
ஸ்கோடா ரூ.30,000(ஃபேபியா ஸ்காட்)முதல் ரூ.1,00,000 (ஃபேபியா டீசல்) வரை சலுகைகள் வழங்கியுள்ளது.
ரெனோ
ரெனோ ரூ.19,018 – 26,198(பல்ஸ்)முதல் ரூ.75,000 (ஃபூளூயன்ஸ்) வரை சலுகைகள் வழங்கியுள்ளது.
நிசான்
நிசான் ரூ.16,770 – 50,000(மைக்ரா)முதல் ரூ.22,993 – 35,651 (சன்னி) வரை சலுகைகள் வழங்கியுள்ளது.