கடந்த 2016-2017 நிதி ஆண்டில் இந்தியாவின் முன்னணி கார் தயாரிப்பாளரான மாருதி சுசுகி கார் நிறுவனம் 1,568,603 வாகனங்களை விற்பனை செய்து முந்தைய நிதி ஆண்டை விட 9.8 சதவீத வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.
மாருதி சுசுகி கார் விற்பனை 16-17
- இந்தியாவின் முன்னணி தயாரிப்பாளர் மாருதி முதன்முறையாக 1.50 கோடி வாகன விற்பனையை கடந்துள்ளது.
- கடந்த மார்ச் 2017ல் 139,763 வாகனங்களை விற்பனை செய்துள்ளது.
- மார்ச் 2017 மாதந்திர ஏற்றுமதியில் 11, 764 வாகனங்களை ஏற்றுமதி செய்துள்ளது.
கடந்த மார்ச் 2016ல் 129,345 வாகனங்கள் உள்நாட்டிலும் மற்றும் வெளிநாட்டிலும் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இந்த வருடத்தின் மார்ச் 2017ல் ஏற்றுமதி உள்பட 139,763 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. மார்ச் 2017 ல் ஏற்றுமதி செய்யப்பட்ட வாகனங்களின் எண்ணிக்கை 11, 764 ஆகும்.
ஸ்விஃப்ட் , பலேனோ, இக்னிஸ் , விட்டாரா பிரெஸ்ஸா மற்றும் ஆல்ட்டோ போன்ற மாடல்கள் மிக சிறப்பான பங்களிப்பினை வழங்கி வருகின்றது. மாருதி சியாஸ் செடான் கார் இன்று முதல் நெக்ஸா ஷோரூம் வழியாக விற்பனை செய்யப்பட உள்ளது.
கடந்த நிதி ஆண்டில் 2016-2017ல் சுமார் 1,568,603 வாகனங்களை விற்பனை செய்து இந்தியாவின் முதன்மையான வாகன தயாரிப்பாளராக மாருதி விளங்குகின்றது.