Categories: Auto Industry

விற்பனையில் டாப் 10 பைக்குகள் – மே 2015

கடந்த மே மாதத்தில் இந்திய சந்தையில் விற்பனையில் சிறந்து விளங்கிய டாப் 10 பைக் தொகுப்பினை காணலாம். டாப் 10 பைக் விற்பனை நிலவரம் 2015 முழு விவரம்.
47cbf hero2bsplendor2bpro2bclassic

10. ஹோண்டா டிரீம்

ஹோண்டா டிரீம் 39710 பைக்குகள் விற்பனை செய்துள்ளது. இதன் மூலம் பத்தாம் இடத்தினை பெற்றுள்ளது.

9. பஜாஜ் பல்சர்

புதிதாக விற்பனைக்கு வந்துள்ள பல்சர் வரிசை மாடல்கள் விற்பனையில் இணைந்தும் 6 % சரிவை சந்தித்துள்ளது. கடந்த மே மாதத்தில் 53263 பைக்குகள் விற்பனை செய்துள்ளது. கடந்த மே 2014ம் ஆண்டில் 56,391  விற்பனை செய்துள்ளது

8. ஹீரோ கிளாமர்

ஹீரோ கிளாமர் பைக் அதிரடியாக 22 % வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. கடந்த மே மாதத்தில் 58434 பைக்குகள் விற்பனை செய்துள்ளது. கடந்த மே 2014ம் ஆண்டில் 47,764  விற்பனை செய்துள்ளது

7. டிவிஎஸ் XL சூப்பர்

டிவிஎஸ் எக்ஸ்எல் சூப்பர் மொபட் 63,555 மொபட்களை விற்பனை செய்துள்ளது. கடந்த மே 2014ம் ஆண்டைவிட 5 % வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.

அதிக மைலேஜ் தரும் சிறந்த 10 பைக்குகள்

6.  பஜாஜ் CT 100

பஜாஜ் CT 100 பைக் நகர்புற சந்தையில் விற்பனைக்கு வந்த பின்னர் 66,263 பைக்குகளை விற்பனை செய்துள்ளது.

5. ஹோண்டா CB ஷைன்

ஹோண்டா சிபி ஷைன் பைக் மாடல் ஐந்தாம் இடத்தில் உள்ளது.  கடந்த மே மாதத்தில் 78,183  பைக்குகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. கடந்த மே 2014ம் ஆண்டில் 78,401  விற்பனை செய்துள்ளது.

4. ஹீரோ HF டீலக்ஸ்

ஹீரோ எச்எஃப் டீலக்ஸ் பைக் கடந்த ஆண்டு மே மாதத்தை விட 9 % வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. மே மாதத்தில் 93,944 எச்எஃப் டீலக்ஸ் விற்பனை செய்துள்ளது. கடந்த மே 2014ம் ஆண்டில் 86,509  விற்பனை செய்துள்ளது

3. ஹீரோ பேஸன்

ஹீரோ பேஸன் பைக் மாடல் மூன்றாம் இடத்தில் உள்ளது. ஆனால் விற்பனை சரிவினை சந்தித்துள்ளது. கடந்த மே மாதத்தில் 1,04,054 பேஸன் பைக்குகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. கடந்த மே 2014ம் ஆண்டினை விட 27 % சரிவை (1,42,885) சந்தித்துள்ளது.

புதிய ஹீரோ பேஸன் புரோ முழுவிபரம்

2. ஹோண்டா ஆக்டிவா

ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டர் இந்தியர்களின் மிக விருப்பமான ஸ்கூட்டராக விளங்கி வருகின்றது. கடந்த மே மாதத்தில் 1,87,827 ஆக்டிவா ஸ்கூட்டர் விற்பனை செய்யப்பட்டுள்ளன. கடந்த மே 2014ம் ஆண்டினை விட 17 % வளர்ச்சியை (1,61,030) பதிவு செய்துள்ளது

1. ஹீரோ ஸ்பிளென்டர்
ஹீரோ நிறுவனத்தின்  ஸ்பிளென்டர் பைக் தொடர்ந்து நல்ல விற்பனையை பதிவு செய்து வருகின்றது. கடந்த மே மாதத்தில் 2,41,249 ஸ்பிளென்டர் பைக்குகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. கடந்த மே 2014ம் ஆண்டினை விட 9 % வளர்ச்சியை (2,21,420) பதிவு செய்துள்ளது

உலகின் அதிக மைலேஜ் தரும் பைக் ஸ்பிளென்டர்

TOP 10 Selling two Wheelers  May 2015 Report