ஹீரோ மோட்டோகார்ப் அக்டோபர் விற்பனை நிலவரம்

ஹீரோ  மோட்டோகார்ப் நிறுவனம் கடந்த அக்டோபர் மாதத்தில் 6,39,802 இருசக்கர வாகனங்களை விற்பனை செய்துள்ளது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தை விட 11.25 சதவீத வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.
ஹீரோ மேஸ்ட்ரோ எட்ஜ் மற்றும் டூயட்
ஹீரோ மேஸ்ட்ரோ எட்ஜ் மற்றும் டூயட் 

மேஸ்ட்ரோ மற்றும் பிளஸர் ஸ்கூட்டர்களின் வரிசையில் புதிதாக இணைந்த ஹீரோ மேஸ்ட்ரோ எட்ஜ் மற்றும் டூயட் ஸ்கூட்டர்களின் ஓட்டுமொத்த விற்பனை 1,08,000 ஸ்கூட்டர்களை எட்டியுள்ளது. ஸ்கூட்டர் சந்தையில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தை விட 74.6 % வளர்ச்சியை பதிவுசெய்துள்ளது.

இதற்க்கு முன்பாக மாத விற்பனையில் 6 லட்ச இருசக்கர வாகனங்களை 4 முறை கடந்துள்ளது. ஹீரோ வரலாற்றில் முதன்முறையாக மாத விற்பனையில் அதிகபட்சமாக கடந்த அக்டோபர் மாதத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

6 லட்சங்களை கடந்த புள்ளி விபரம்

அக்டோபர் 2013 – 6 ,25,420
மே 2014 – 6,02,481
செப்டம்பர் 2014 – 6,04,052
செப்டம்பர் 2015 – 6,06,744
அக்டோபர் 2015 – 6,39,802

Hero Motocorp October 2015 sales Report

Exit mobile version