இந்தியாவில் விற்பனை செய்யப்படுகின்ற ஹோண்டா நிறுவனத்தின் எம்பிவி ரக மாடலான மொபிலியோ காரை அதிகார்வப்பூர்வமாக சந்தையிலிருந்து நீக்கப்பட்டுள்ளது. புதிய மொபிலியோ வருவதற்கான வாய்ப்புகள் மிக குறைவே என நம்பப்படுகின்றது.

மொபிலியோ நீக்கம்

எர்டிகா காருக்கு நேரடியான போட்டியாளராக மற்றும் லாட்ஜி, சைலோ, இன்னோவா போன்ற பலவேறு பயன்பாடுகளுக்கு ஏற்ற வாகனமாக அறிமுகம் செய்யப்பட்டிருந்த பிரியோ அடிப்படையில் உருவான மொபிலியோ கார் இந்திய சந்தையில் போதிய வரவேற்பினை பெற தவறியதால் நீக்கப்பட்டுள்ளது.

ஸ்போர்ட்டிவ் என்ற பெயரில் சில மாறுதல்களுடன் வெளியான மொபிலியோ ஆர்எஸ் மாடலும் வரவேற்பினை பெற தவறியதாலும், மிக குறைந்த எண்ணிக்கையினாலும் சந்தையிலிருந்து நீக்கப்பட்டிருந்தாலும் புதிய மாடல் வருகை குறித்து எந்த தகவலும் இல்லை.

ஹோண்டா கார் வெளியிட்டுள்ள அதிகார்வப்பூர்வ அறிக்கையில் போதிய வரவேற்பினை பெறாத மொபிலியோ சந்தையிலிருந்து நீக்கப்பட்டாலும் பயன்பாட்டில் உள்ள  வாகனங்களுக்கு உதிரிபாகங்கள் மற்றும் சர்வீஸ் போன்றவற்றில் எந்த சிக்கலும் ஏற்படாது என உறுதிப்படுத்தியுள்ளதால் புதிய மொபிலியோ வரும் வாய்ப்புகள் இல்லை என்றே கருதப்படுகின்றது.