Site icon Automobile Tamilan

டியாகோ காருக்கு அமோக வரவேற்பு : டாடா மோட்டார்ஸ்

டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் புதிய இம்பேக்ட் டிசைன் கான்செப்டில் உருவான டாடா டியாகோ கார் அமோக வரவேற்பினை பெற்று 40,000 முன்பதிவுகள் வரை எட்டியுள்ளது. டியாகோ பெட்ரோல் மாடல் சிறப்பான ஆதரவினை பெற்றுள்ளது.

கடந்த ஏப்ரல் 2016யில் விற்பனைக்கு வந்த டியாகோ காருக்கு கடந்து இரு மாதங்களில் 40,000 முன்பதிவுகளை பெற்றுள்ள காத்திருப்பு காலம் இரு மாதங்களாக உயர்ந்துள்ளது. தொடக்கநிலை ஹேட்ச்பேக் கார் பிரிவில் வெளிவந்த டியாகோ காரில் பெட்ரோல் மற்றும் டீசல் இஞ்ஜின் ஆப்ஷனுடன் 5 வேக மெனுவல் கியர்பாக்சினை பகிர்ந்துகொண்டுள்ளது.

69 bhp ஆற்றலை வழங்கும் புதிய 1.05 லிட்டர் ரெவோடார்க் என்ஜின் டார்க் 140Nm ஆகும். சிட்டி மற்றும் இக்கோ இரண்டு விதமான டிரைவிங் ஆப்ஷன் உள்ளது. 5 வேக மெனுவல் கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது.

1.2 லிட்டர் ரெவோட்ரான் என்ஜின் ஆற்றல் 83.8 bhp மற்றும் டார்க் 114 Nn ஆகும். சிட்டி மற்றும் இக்கோ இரண்டு விதமான டிரைவிங் ஆப்ஷன் உள்ளது. 5 வேக மெனுவல் கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது.

அடுத்த சில மாதங்களில் டாடா டியாகோ காரின் ஏக்டிவ் க்ராஸ்ஓவர் மாடல் மற்றும் ஏஎம்டி கியர்பாக்ஸ் பொருத்தப்பட்ட மாடல்கள் வருகின்ற தீபாவளி பண்டிகை காலத்தில் வெளியிட வாய்ப்புகள் உள்ளது. இதுதவிர டியாகோ காரினை அடிப்படையாக கைட்5 செடான் காரும் வரவுள்ளது.

பிரத்யேகமான நானோ கார்கள் தயாரிக்க உருவாக்கப்பட்ட குஜராத் டாடா சனந்த ஆலையில் தயாரிக்கப்படுகின்ற டியாகோ காரின் உற்பத்தி மேலும் அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் உருவாகி வருகின்ற நிலையில் காத்திருப்பு காலத்தை கட்டுக்குள் கொண்டு வரு முயற்சியில் டாடா ஈடுபடலாம்.

டாடா டியாகோ முழுவிபரம்

Exit mobile version