கடந்த நவம்பர் 2015யில் விற்பனையில் முதல் 10 இடங்களை பிடித்த ஸ்கூட்டர்களை பற்றி இந்த பகிர்வில் தெரிந்து கொள்ளலாம். ஹீரோ மேஸ்ட்ரோ எட்ஜ் மற்றும் டூயட் ஸ்கூட்டர்கள் சிறப்பான விற்பனையை பதிவு செய்துள்ளது.
ஸ்கூட்டர் சந்தையில் 50 சதவீத பங்கினை கொண்டுள்ள ஹோண்டா நிறுவனம் கடந்த நவம்பரில் 1,83,824 ஸ்கூட்டர்களை விற்பனை செய்து முதலிடத்தினை கைப்பற்றியுள்ளது. ஒட்டுமொத்த இருசக்கர வாகன விற்பனையில் ஆக்டிவா ஸ்கூட்டர் இரண்டாமிடத்தில் உள்ளது.
டிவிஎஸ் ஜூபிடர் 51, 768 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட ஹீரோ மேஸ்ட்ரோ எட்ஜ் மற்றும் மேஸ்ட்ரோ ஸ்கூட்டர்கள் 35,672 வாகனங்களை விற்பனை செய்துள்ளது.
ஹோண்டா டியோ ஸ்கூட்டரை பின்னுக்கு தள்ளி டூயட் 4 வது இடத்தில் உள்ளது . யமஹா நிறுவனத்தின் மிகவும் கிளாசிக் ஸ்டைலான பேசினோ ஸ்கூட்டர் 13,078 விற்பனையாகி 6வது இடத்தில் உள்ளது. கஸ்ட்டோ 9வது இடத்தில் உள்ளது.
மேலும் படிக்க ; விற்பனையில் முதல் 10 பைக்குகள் நவம்பர் 2015