அசோக் லேலண்ட் வாகன விற்பனை 20 % சரிவு

பிரபலமான வர்த்தக வாகன தயாரிப்பளராக விளங்கும் ஹிந்துஜா குழுமத்தின் அசோக் லேலண்ட் நிறுவனம், டிசம்பர் 2018 மாதந்திர விற்பனையில் மொத்தமாக 15,493 யூனிட்டுகளை விற்பனை செய்துள்ளது.

நடுத்தர மற்றும் கனரக வர்த்தக வாகன பிரிவில் ஏற்பட்டுள்ள 29 சதவீத சரிவை சந்தித்து 11,295 யூனிட்டுகள் மட்டுமே விற்பனை செய்துள்ளது. முந்தைய 2017 டிசம்பரில் 15,948 யூனிட்டுகள் விற்பனை செய்திருந்தது குறிப்பிடதக்கதாகும்.

ஆனால் இந்நிறுவனத்தின் எல்சிவி எனப்படுகின்ற இலகுர வர்த்தக வாகன விற்பனை முந்தைய வருடத்தின் இதே மாதத்துடன் ஒப்பீடுகையில் 27 சதவீத வளர்ச்சி பெற்றுள்ளது. அதாவது டிசம்பர் 2018 யில் 4,198  யூனிட்டுகளும், கடந்த டிசம்பர் 2017 யில் 3,303 எண்ணிக்கையை பதிவு செய்திருந்தது.

ஒட்டுமொத்தமாக டிசம்பர் 2018யில் 15,493 யூனிட்டுகளை விற்பனை செய்தும், முந்தைய 2017 டிசம்பரில் 19,251 வாகனங்களை விற்பனை செய்திருந்தது. இந்த நிதி வருடத்தின் ஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலான காலகட்டத்தில் சுமார் 137,848 யூனிட்டுகளை விற்பனை செய்து முந்தைய வருட நிதி ஆண்டில் இதே காலத்துடன் ஒப்பீடுகையில் 19 சதவீத வளர்ச்சியாகும்.

Exit mobile version